Home /News /entertainment /

தொடர்ந்து ஐசியூவில் பாரதிராஜா... உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

தொடர்ந்து ஐசியூவில் பாரதிராஜா... உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தகவல்

பாரதிராஜா

பாரதிராஜா

பாரதிராஜாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா தொடர்ந்து ஐசியூவில் இருப்பதாகவும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூன்று நாட்கள் சிகிச்சை வழங்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து உள்ளிட்ட பலர் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டிருந்த அறிக்கையில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. எனவே என்னை நேரில் காண வர வேண்டாம்' என்றும் பூரண நலம் பெற்று அனைவரையும் சந்திப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

    இதையும் படிங்க: பொன்னியின் செல்வன் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

    பாரதி ராஜா உடல் நிலை தொடர்பாக எம்ஜிஎம் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரதிராஜாவுக்கு தொடர்ந்து ஐசியூவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்றும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Bharathiraja, Hospital

    அடுத்த செய்தி