எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அதிமுகவை வழிநடத்த என்னிடம் ஆதரவு கேட்டார்கள்...! பாக்யராஜ் பேச்சு

எம்.ஜி.ஆர் இறந்த பிறகு அதிமுகவை வழிநடத்த என்னிடம் ஆதரவு கேட்டார்கள்...! பாக்யராஜ் பேச்சு
  • News18
  • Last Updated: February 14, 2020, 5:49 PM IST
  • Share this:
எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு அதிமுகவை முன்னின்று வழிநடத்த என்னிடம் ஆதரவு தேடி வந்தார்கள் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ஹரி உத்ரா இயக்கத்தில் தமிழக எல்லையில் கொட்டப்படும் கேரள கழிவுகளை கண்டித்து எடுக்கபட்ட 'கல்தா அரசியல் பழகு' என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பின்னர் பேசிய இயக்குனர் பாக்யராஜ், அரசியலுக்கு தனி மூளை வேண்டும். ஆனா தனக்கு அந்த மூளை இல்லை, அதுக்கு உதாரணமே எம்ஜிஆர் இறந்த போது என்னிடம் ஆதரவு தேடி வந்தார்கள். அப்பொழுது வந்த அதிமுக நிர்வாகிகள் நீங்களே முன்னின்று இந்த கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதை சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

ஆனால் நான் மறுத்துவிட்டேன். நீங்களே பொதுக்குழு கூட்டம் நடத்தி தேர்வு செய்யுங்கள் என்று சொல்லிவிட்டேன். ஆனால் உங்கள் மனதில் யார் இருக்கிறார்கள் என்று கேட்டதும் ஜெயலலிதா என்று சொன்னேன் என்று பாக்யராஜ் தெரிவித்தார்.

அப்பவே நான் அதிமுக நிர்வாகிகள் கேட்டதை போல யாரோ ஒருவருக்கு வெளிப்படையாக ஜெயலலிதாவை ஆதரித்து இருந்தால், எப்பவோ ஜெயலலிதாவிற்கு வலது கரமாக இருந்து அப்படியே அரசியல் கற்றுக்கொண்டு இருக்கலாம் என்றும் பாக்யராஜ் தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய பாக்யராஜ், அரசியலுக்கு என தனி மூளை இல்லாமல் போனதால்  நான் பொது குழு கூட்டி முடிவெடுங்கள் என்று கூறிவிட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.

Also see...
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading