இன்று கே.பாக்யராஜுக்கு பிறந்தநாள். ஒருகாலகட்ட தமிழ் சினிமாவை ஆண்டவர். தமிழ் சினிமாவின் முகத்தை மாற்றியவர்களில் ஒருவர். இன்றும் இவரது திரைக்கதை நுட்பங்கள் புகழ்பெற்றவை.
அவருக்கு பிறந்தநாளின் போது அவரது குரு
பாரதிராஜாவும், சிஷயர் பார்த்திபனும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குரு - சிஷ்ய உறவுக்கு இலக்கணம் என்றால் அது பாரதிராஜாவும் பாக்யராஜும்தான். பாரதிராஜாவிடமிருந்து போன் வந்தால் எழுந்து நின்றுதான் இன்றும் பதிலளிப்பார் பாக்யராஜ். இது ஒன்றே போதும் அவரது குரு பக்திக்கு.இதற்கு சற்றும் சளைத்ததல்ல பார்த்திபன் தனது குரு பாக்யராஜ் மீது கொண்டிருக்கும் பக்தி.
இதையும் படிங்க.. சன் டிவியில் பொங்கல் ஸ்பெஷல் மெகாஹிட் திரைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்!
பாக்யராஜின் பிறந்தநாளான இன்று இவர்கள் இருவருமே அவரவர் பாணியில் திரைக்கதை மன்னனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குரு & சிஷ்யன் உறவுக்கு இலக்கணமாக திகழும் என் ராஜனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். உனக்கு என்றும் நான் துணை நிற்பேன்.
அன்புடன் உன் ஆசான்
பாரதிராஜா.
என சிஷ்யனின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்துள்ளார் பாரதிராஜா.
முதலாம் ஞானமே.
மூன்றாம் ஞாலமே
இரண்டாம் தாயே!
வணங்குகிறேன்!!
எனக்கு சினிமாவின்
தாமஸ் ஆல்வா எடிசன் KB சார்! ஆனால் என்னை special edition ஆக சினிமாவில் உருவாக்கியவர் என் குரு KB சார்!
இன்னொரு கை ஓசையின்றி வந்தவர்…
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டியத் தலைவர்.
- என பார்த்திபன் வாழ்த்தியுள்ளார்.
இதையும் படிங்க.. பிக் பாஸ் அமீர் இப்படிப்பட்டவரா? வீடியோவால் தெரிய வந்த உண்மை! கண்ணீரில் ரசிகர்கள் கூட்டம்
நல்ல குரு அமைவது பாக்கியம். பாக்யராஜுக்கு சிஷயனும் சேர்ந்தே அமைந்திருக்கிறார். இதைவிட ஒரு கலைஞனுக்கு என்ன வேண்டும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.