9 வருடங்களுக்குப் பின் படம் இயக்கும் பாலாஜி சக்திவேல் - பர்ஸ்ட் லுக் வெளியீடு

பாலாஜி சக்திவேல்

நடுவில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என இரு படங்களை அறிவித்தார். ஆனால், இரண்டும் அறிவிப்போடு நின்றது.

  • Share this:
    பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் தயாராகும் புதிய படத்தின் பெயர் மற்றும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தமிழின் பெருமைமிகு இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல். அவரது காதல் திரைப்படம், தமிழ் சினிமாவின் அபூர்வமான படைப்புகளில் ஒன்று. சினிமாத்தனத்தில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவை யதார்த்தத்தை நோக்கி திருப்பியது அவரது காதல் திரைப்படம். அவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் வழக்கு எண் 18/9 2012-ல் வெளியானது. ஒரு இயக்குனரின் படைப்பு, பாராட்டை பெறுகையில் அவருக்குள் புதிய படம் குறித்து ஏற்படும் பதட்டமும், எச்சரிக்கையும் வழக்கு எண் படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் பார்க்க இயலும். இந்த பதட்டம் படம் இயக்குவதையே தள்ளிப்போடவும் வைக்கும். அதுதான் பாலாஜி சக்திவேலின் வாழ்க்கையிலும் நடந்தது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    நடுவில் யார் இவர்கள், ர ர ராஜசேகர் என இரு படங்களை அறிவித்தார். ஆனால், இரண்டும் அறிவிப்போடு நின்றது. ஒன்பது வருடங்களுக்குப் பிறகு இப்போது மீண்டும் ஒரு படத்தை பாலாஜி சக்திவேல் இயக்குகிறார். படத்துக்கு நான் நீ நாம் என பெயர் வைத்துள்ளார். வீரா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடிக்க, சுரேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை ஜாவித் ரியாஸ். பாடல்களை யுகபாரதி, லலிதானந்த் இருவரும் எழுதுகிறார்கள். ப்ளூமூன் கிரியேஷன்ஸ் படத்தை தயாரிக்கிறது.

    ஒன்பது வருடங்களுக்குப் பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் என்பதால் திரையுலகினர் மத்தியில் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: