Viral Video : 'நான் கழுத்தில் அணிந்திருப்பது 108 பேரின் இடுப்பு எலும்பு' - வைரலாகும் இயக்குநர் பாலாவின் பழைய வீடியோ

இயக்குநர் பாலா

நான் கழுத்தில் அணிந்திருப்பது 108 பேரின் இடுப்பு எலும்பு என இயக்குநர் பாலா கூறியது இணயத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    இயக்குநர் பாலா தனது கழுத்தில் அணிந்திருக்கும் மாலை குறித்து பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

    இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர் இயக்குநர் பாலா. இவர் இயக்கிய திரைப்படமான பிதாமகனில் நடித்த விக்ரம், நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார்.

    பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.

    தற்போது இவரது பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குனர் பாலா தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்கயில் தனது கழுத்தில் அணிந்திருக்கும் மாலை பற்றி கூறுகின்றார். இந்த வீடியோ தற்போது வைராகி வருகின்றது. அந்த வீடியோவில் தொகுப்பாளினி இயக்குனர் பாலாவிடம் உங்கள் கழுத்தில் என்ன சார் மாலை என கேட்க அதற்கு பதில் அளிக்கும் இயக்குநர் பாலா, இது தண்டு வடம் என கூறியுள்ளார்.



    இந்த மாலையை பிரியமாக உங்களுக்கு யார் கொடுக்கின்றார் என கேட்க அதற்கு பதில் அளித்த பாலா காசியில் நரமாமிசம் திங்கும் அகோரிகள்.  அவர்களுக் குள்ளும் ஒரு கலைஞர் இருப்பார் அல்லவா. ஒரு நாளைக்கு ஒருத்தனை சாப்பிடுவான். அதில் ஒரு பீஸ் தண்டுவடத்தில் இருந்து எடுத்து வந்து அதனை மண்டை ஓடு போல் செய்து வைத்துகொள்வான். இப்படியே சேர்த்து சேர்த்து 108 மண்டை ஓடு சேர்த்து அதனை தனது கழுத்தில் மாலையாக அணிந்து கொள்வான். நான் கழுத்தில் அணிந்திருப்பது 108 பேரின் இடுப்பு எலும்பு என கூறியுள்ளார்.

    இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் பார்க்கப்பட்டு வருகின்றது.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: