Bala-Suriya: 18 வருடம் கழித்து இணையும் பாலா-சூர்யா கூட்டணி!

பாலா - சூர்யா

கடைசியாக இவர்கள் இருவரும் ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து வேலை செய்திருந்தார்கள்.

  • Share this:
    18 வருடம் கழித்து இயக்குநர் பாலா, நடிகர் சூர்யாவுடன் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படைப்புகளால், ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் பாலா. அவரது படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக எப்போதும் கவனம் பெறும். அதனால் பாலா படங்களுக்கு என்றும் எதிர்பார்ப்பு அதிகம்.

    சேது படத்தின் மூலம் இயக்குநரான பாலா தொடர்ந்து நந்தா, பிதாமகன், நான் கடவுள் என வரிசையாக இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதன் பிறகு அவர் இயக்கிய, அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்கள் பாலாவின் மற்ற படங்களை விட வசூலில் பின் தங்கியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் மீண்டும் பாலா - சூர்யா கூட்டணி இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவர்கள் இருவரும் ‘பிதாமகன்’ படத்தில் இணைந்து வேலை செய்திருந்தார்கள். கிட்டத்தட்ட 18 வருடம் கழித்து இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. நாச்சியார் படப்பிடிப்பின் போது, பாலா சூர்யாவிடம், படத்தின் ஒன் லைனை சொல்லி, அவரிடம் சம்மதம் வாங்கி வைத்திருந்தாராம். சமீபத்தில் மொத்த கதையையும் கேட்ட சூர்யா, க்ரீன் சிக்னல் கொடுதிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யாவின் பிறந்தநாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: