அவன்- இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை தவறாக சித்தரித்து வெளியானதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுதலை செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு இயக்குனர் பாலா கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான அவன் -இவன் திரைப்படம் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டது. இதில் முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் இருக்கும் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்ததாக படம் வெளியான போதே சர்ச்சைகள் எழுந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகேச தீர்த்தபதி மற்றும் தங்களது குலதெய்வமான சொரிமுத்தையனாரையும் அவதூறாக சித்தரித்து படம் வெளியிடப்பட்டுள்ளது எனக்கூறி சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கர ஆத்மஜன் தயாரிபு நிறுவனமான கல்பாத்தி அகோரம், இயக்குனர் பாலா, நடிகர் ஆர்யா ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார். கல்பாத்தி அகோரம் ஜமீன் குடும்பத்துடன் சமாதானம் பேசி தன்னை வழக்கில் இருந்து விடுவித்துக் கொண்டனர்.
வழக்கின் விசாரணை அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை பெற்றனர். இதனால் சில ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெறாமல் இருந்தது. தடை நீங்கிய நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்கியது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்த நிலையில் நடிகர் ஆர்யா இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து இயக்குனர் பாலா மீது மட்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது கடந்த இரண்டு வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத இயக்குனர் பாலா இன்று நடைபெறும் இறுதி விசாரணை மற்றும் தீர்ப்பிற்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார்.
காலை 10 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் வந்து காத்திருந்த பாலா 10.30 மணிக்கு நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் முன்பு ஆஜரானார். வழக்கு தொடர்ந்த சங்கர ஆத்மஜனும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார். வழக்கு தொடர்ந்தவர்கள் குற்றத்தை சரியாக நிரூபிக்கவில்லை எனவே சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளித்து விடுதலை செய்வதாக நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் அறிவித்தார்.
Also read... நடிகர் விஷாலுக்கு எதிராக வழக்கு போட்ட லைகா நிறுவனத்துக்கு நீதிமன்றம் அபராதம்
இந்த நிலையில் பாலாவின் வழக்கறிஞர் முகமது உசேன் கூறுகையில் வழக்கு தொடர்ந்தவர்கள் குற்றத்தை நிரூபிக்க வில்லை, அதனால் பாலாவை விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்துள்ளார். ஜமீன் முருகேச தீர்த்தபதி குறித்தும் அவர்களது குலதெய்வம் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் அவன் இவன் திரைப்படத்தில் பதிவு செய்யப்படவில்லை. எனவே வழக்கிலிருந்து பாலா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து இயக்குனர் பாலா பேசுகையில் தன் மீது போடப்பட்ட பொய் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு உள்ளேன் என்று நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் இயக்குனர் பாலா மீது நாங்கள் தொடர்ந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற ஆவணங்களை பெற்று இளைய ஜமீன் சங்கர ஆத்மஜனை கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார். 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு பாலா விடுவிப்பு மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director bala