முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / இயக்குனர் ஆச்சார்யா ரவி காலமானார்

இயக்குனர் ஆச்சார்யா ரவி காலமானார்

இயக்குனர் ஆச்சார்யா ரவி

இயக்குனர் ஆச்சார்யா ரவி

கடந்த சில வாரங்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் முதலில் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நேற்று காலை ஆச்சார்யா படத்தின் இயக்குனரும், பாலாவின் படங்களில் உதவி இயக்குனராக தொடர்ந்து பங்காற்றி வந்தவருமான ஆச்சார்யா ரவி காலாமானார்.

ரவி இயக்குனர் பாலாவின் நெருங்கிய நண்பர். பாலா இயக்குனராவதற்கு முன் அவரும் ரவியும் அறை தோழர்கள். வாடா போடா நண்பர்கள். ரவி முதலில் வசனகர்த்தாவும் இயக்குனருமான லியாகத் அலிகானிடம் உதவியாளராக பணியாற்றினார். சேது படத்திலிருந்து பாலாவின் படங்களில் இணை இயக்குனராக பணியாற்ற ஆரம்பித்தார். அவ்வப்போது நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாதக்கணக்கில் பிரிந்து இருப்பதும் உண்டு.

இதையும் படிங்க.. இந்தியில் புஷ்பா வசூலை வலிமை முறியடிக்குமா?

2006 இல் விக்னேஷ் நடிப்பில் ஆச்சார்யா என்ற படத்தை ரவி இயக்கினார். சேது படத்தில் முதலில் விக்னேஷ்தான் நடிப்பதாக இருந்தது. பாலாவின் இணை இயக்குனர் என்பதால் ஆச்சார்யாவுக்கு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் அதை நிறைவேற்றவில்லை. அதன் பிறகு பல வருட போராட்டங்களுக்குப் பின் பீகாரில் நடக்கும் பெண் குழந்தைகள் கடத்தல் பற்றிய படத்தை எடுத்தார். என்னதான் பேசுவதோ என்று படத்துக்கு பெயர். படம் முடிந்த பின்பும் விலை போகவில்லை. அதனால் படத்தின் பெயரை 24 ருப்பீஸ் என்று மாற்றினர். அப்படியும் படம் திரைக்கு வரவில்லை.

இதையும் படிங்க.. இந்திய படங்களுக்கு சவால்.. 175 கோடிகளை வசூலித்த ஸ்பைடர் மேன் - நோ வே ஹோம்!

இதனிடையில் பாலாவின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். கடந்த சில வாரங்களாக கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் முதலில் சென்னையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். பிறகு மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை ஏற்பட்ட மாரடைப்பில் ரவி காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தவும், இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவும் திரையுலகினர், நண்பர்கள் மதுரை விரைந்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Director bala, Kollywood, Tamil Cinema