Home /News /entertainment /

சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட புதிய சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவர வேண்டும் - பாக்யராஜ் கோரிக்கை

சிறிய பட்ஜெட் படங்களை வெளியிட புதிய சட்டத்தை தமிழக முதல்வர் கொண்டுவர வேண்டும் - பாக்யராஜ் கோரிக்கை

டைட்டில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

டைட்டில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா

இன்றைய இயக்குனர்கள் நான்கு, ஐந்து திரைப்படங்களோடு நிறுத்திக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் கதை முடிந்துவிடுகிறது. அதற்கு காரணம் அவர்கள் எழுதுவது குறைவாக உள்ளது. – இயக்குனர் எஸ்.பி.முத்து ராமன்

  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தமிழில் உருவாகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்களை திரையிட புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கே.பாக்யராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

விஜித் நடித்துள்ள டைட்டில் என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பிரபல இயக்குனர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.பாக்யராஜ், பேரரசு, நடிகர் ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கே.பாக்யராஜ், சின்ன திரைப்படங்கள் வெற்றியடைய வேண்டும். அதற்கு தமிழக அரசு புதிய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறிப்பாக நான்கு திரையரங்குக்கு கொண்ட மல்டிபிளக்ஸில் ஒரு திரையரங்கை சின்ன படங்களுக்கு தான் ஒதுக்க வேண்டும் என்று சட்டத்தை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.

சூர்யா 42 படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது… 2 பாகங்களாக படம் உருவாகும் என தகவல்

அது போன்ற நிலை ஏற்பட்டால் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் நிச்சயம் வெற்றி அடையும் எனவும் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். நடிகர் ராதாரவி பேசுகையில்,  நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கே.பாக்யராஜ் உள்ளிட்ட அனைவரின் தாடியையும் விமர்சனம் செய்தார். தாடி வைத்திருந்தால் அவர்கள் சோம்பேறி என கூறினார். தாடி இல்லாமல் இருந்தால்தான், முகம் பொழிவுடன் இருக்கும். அதை நம்பி தொழிலாளர்கள் இருக்கிறார்கள். எனவே அனைவரும் தாடியை நீக்கி பொழிவுடன் இருக்க பேண்டும் என குட்டி கதையையும் கூறி நகைச்சுவையாக பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய இயக்குநர் பேரரசு, தாடி வைத்திருப்பவர்கள் எல்லாம் சோம்பேறிகள் என்று ராதாரவி கூறுகிறார். இந்திய பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோர் தாடி வைத்துள்ளனர் என்று பதில் அளித்தார்.

பொன்னியின் செல்வன் : ‘சோழா சோழா’ பாடல் வெளியீட்டு விழா ஆல்பம்…

எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், நான் ரஜினிகாந்தை வைத்து 25 படங்களையும், கமல்ஹாசனை வைத்து 10 படங்களையும்,  சிவாஜி கணேசன் வைத்து 3 திரைப்படங்களையும் இயக்கியுள்ளேன். அதேபோல் மற்ற நடிகர்களை வைத்து பல படங்களை இயக்கியுள்ளேன்.

மொத்தமாக 70 திரைப்படங்களை இயக்கியிருக்கிறேன் என கூறினார். ஆனால் இன்றைய இயக்குனர்கள் நான்கு,  ஐந்து திரைப்படங்களோடு நிறுத்திக் கொள்கின்றனர். அத்துடன் அவர்கள் கதை முடிந்துவிடுகிறது.  அதற்கு காரணம் அவர்கள் எழுதுவது குறைவாக உள்ளது.  மேலும் அவர்களுக்கு சொற் தொடரை எழுத தெரியவில்லை என வேதனையடைந்தார்.

எனவே,  தற்போதைய வரும் இயக்குனர்கள் எங்களை மிஞ்சி திரைப்படங்களை எடுக்க வேண்டும். 80 படங்கள், 100 படங்கள் என அவர்கள் சாதனை படைக்க வேண்டும்.  அதற்கு அவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  இறுதியில் டைட்டில் என்ற படத்தில் ட்ரெய்லரை எஸ்.பி.முத்துராமன் வெளியிட கே.பாக்யராஜ் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.
Published by:Musthak
First published:

Tags: Kollywood

அடுத்த செய்தி