ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிளான் பண்ணி நடிகரான இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்...!

பிளான் பண்ணி நடிகரான இயக்குனர் பத்ரி வெங்கடேஷ்...!

பத்ரி வெங்கடேஷ்

பத்ரி வெங்கடேஷ்

2010 இல் அதர்வா அறிமுகமான படம் பாணா காத்தாடி. அதில்தான் சமந்தாவும் முதலில் நடித்தார். படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கும் அதுதான் முதல் படம்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் ஒரே படத்தில் தயாரிப்பாளர், நடிகர் என இரு புரமோஷன்களை பெற்றுள்ளார்.

2010 இல் அதர்வா அறிமுகமான படம் பாணா காத்தாடி. அதில்தான் சமந்தாவும் முதலில் நடித்தார். படத்தின் இயக்குனர் பத்ரி வெங்கடேஷுக்கும் அதுதான் முதல் படம். அறிமுக இயக்குனர் என்ற அளவில் பாணா காத்தாடிக்கு பாஸ் மார்க் தரலாம்.

ஆனால், முதல் படத்துக்குப் பிறகு பத்ரி வெங்கடேஷுக்கு இரண்டாவது படம் எளிதில் அமையவில்லை. எட்டு வருடங்களுக்குப் பிறகு பத்ரியின் முதல் பட ஹீரோ அதர்வாவே அழைத்து ஒரு படம் தந்தார். படத்தை அதர்வாவே தயாரித்தார். செம போத ஆகாத என்ற அந்தப் படம் பிளாப்பானது.

Also read... மார்க் ஆண்டனி படத்தில் இணைந்த இசை அசுரன்...!

Also read... தங்கச் சுரங்கப் பின்னணியில் தயாராகும் இரஞ்சித், விக்ரம் படம்..?

அதையடுத்து பத்ரி வெங்கடேஷ் இயக்கிய படம் பிளான் பண்ணி பண்ணணும். பல வெளியீட்டு தேதிகளை கடந்து சென்ற வருடம் படம் வெளியானது. எந்த சலனத்தையும் படம் ஏற்படுத்தவில்லை.

அடுத்தப் படத்துக்கு தயாரிப்பாளர், நடிகருக்கு காத்திருந்தால் இன்னும் பல வருடங்கள் ஓடிவிடும் என்பதால் பத்ரி வெங்கடேஷே துணிந்து ஒரு படத்தை ஆரம்பித்துள்ளார். ஹாரர் படமான இதில் அவரே நடிக்கவும் செய்கிறார். தயாரிப்பாளர் என்ற ஒரே கல்லில் இயக்குனர், நடிகர், புதிதாக ஒரு படம் என மூன்று மாங்காய்களை அடித்துள்ளார் பத்ரி. படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் டீஸரையும் வெளியிட்டுள்ளார்.

இயக்கத்தில் சறுக்கல்களை சந்தித்து நடிப்புக்கு திரும்பிய யாரும் மீண்டும் இயக்கத்தில் ஜொலித்ததில்லை. பத்ரி எப்படி என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Entertainment