Home » News » Entertainment » CINEMA DIRECTOR BABU SIVAN PASSED AWAY VJR

விஜய் பட இயக்குனர் பாபு சிவன் திடீர் மரணம்... ரசிகர்கள் சோகம்

பாபு சிவன் சன் டிவியில் ஒளிப்பராப்பி வரும் ராசாத்தி சீரியலை இயக்கி வந்தார்.

விஜய் பட இயக்குனர் பாபு சிவன் திடீர் மரணம்... ரசிகர்கள் சோகம்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 10:09 AM IST
  • Share this:
விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய பாபு சிவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

தமிழில் வேட்டைக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பாபு சிவன். இவருக்கு வயது 54. இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். நடிகர் விஜய்யின் குருவி, பைரவா படத்திற்கு வசனமும் எழுதி உள்ளார்.

வேட்டைக்காரன் படத்திற்கு பின் எந்த திரைப்படத்தையும் பாபு சிவன் இயக்கவில்லை. அதன்பின் சன் டிவியில் ஒளிப்பராப்பி வரும் ராசாத்தி சீரியலை இயக்கி வந்தார்.


இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாபு சிவன் ஒரிரு நாட்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பாபு சிவன் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading