முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / தெலுங்கு மாஸ் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் அட்லீ...

தெலுங்கு மாஸ் ஹீரோவுடன் இணையும் இயக்குனர் அட்லீ...

அட்லீ

அட்லீ

அட்லீ, இந்தியில் ஷாரூக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். நயன்தாரா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் இந்த படத்திற்கு ஒர்க்கிங் டைட்டிலாக லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகரின் அடுத்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியானது. இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் சுமார் ரூ. 340 கோடியை வசூலித்திருப்பதாக சினிமா வல்லுனர்கள் கணித்துள்ளார்கள்.

புஷ்பா படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்துள்ள நிலையில், அடுத்த பாகத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை சுகுமார் இயக்குகிறார்.

முதல் பாகம் பிரமாண்ட வெற்றி அடைந்திருப்பதால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, பிரபல இயக்குனர் அட்லீ, இந்தியில் ஷாரூக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கி வருகிறார். நயன்தாரா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கும் இந்த படத்திற்கு ஒர்க்கிங் டைட்டிலாக லயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மாஸ் அப்டேட்!

இந்த படத்தை முடித்துக் கொண்டு அல்லு அர்ஜுனின் அடுத்த படத்தை அட்லீ இயக்குவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பாக முன்னரே இருவரும் சந்தித்து பேசியதாகவும், அப்போது அட்லீ கூறிய கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்துப் போக, புஷ்பா 2ம் பாகத்திற்கு பின்னர் கால்ஷீட் தேதி கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் படம்!

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. புஷ்பாவைப் போல இந்தப் படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கப்படவுள்ளது.

First published:

Tags: Atlee