ஆங்கிலம், இந்தி மொழிகள்தான் அறிவல்ல - கருப்பு வெறும் நிறம் மட்டுமே: அட்லீ அதிரடி

ஆங்கிலம், இந்தி மொழிகள்தான் அறிவல்ல - கருப்பு வெறும் நிறம் மட்டுமே: அட்லீ அதிரடி
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2019, 8:22 PM IST
  • Share this:
ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை மொழிகள் தான், அறிவு அல்ல என்றும் அதேபோல் கருப்பு என்பது ஒரு நிறம் மட்டுமே எனக் கூறி தன் மீதான விமர்சனங்களுக்கு இயக்குநர் அட்லீ பதிலடி கொடுத்துள்ளார்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், படம் விரைவில் சென்சாருக்கு செல்ல உள்ளதாகவும், அக்டோபர் முதல் வாரத்தில் டீசர் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இந்த படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரப் பெயர் ஏஞ்சல் என்பதை அறிவித்த அட்லீ, பெண்கள் மிகவும் வலிமையானவர்கள் என்றும், தனது படங்களின் ஆணிவேராக அவர்களது கதாபாத்திரம் இருக்கும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.


அதனால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தன்னால் தாங்கிக் கொள்ள முடிவதில்லை என்றும் அவர் கூறினார். இதுவரை தான் எழுதிய கதைகளில் பிகில் தான் சிறப்பானது எனக் கூறிய அட்லீ, பார்சிலோனா அல்லது ஸ்பெய்ன் அணியின் கால்பந்து ஆட்டத்தைப் பார்த்த திருப்தியை பிகில் தரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகியவை மொழிகள் தான், அறிவு அல்ல என்றும் அதேபோல் கருப்பு மற்றும் வெள்ளையும் வெறும் நிறம் மட்டுமே எனவும் அவர் கூறினார்.

Watch Also:

Loading...

First published: September 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...