ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு அட்லீ பதில்!

news18
Updated: October 12, 2019, 7:13 PM IST
ஹாலிவுட் தயாரிப்பாளரின் அழைப்புக்கு அட்லீ பதில்!
அட்லீ - திரைப்பட இயக்குநர்
news18
Updated: October 12, 2019, 7:13 PM IST
ஹாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான பில் டியூக்கின் கேள்விக்கு அட்லீ பதிலளித்துள்ளார்.

பிரிடேட்டர், எக்ஸ்மேன்: தி லாஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல படங்களில்ந் நடித்திருக்கும் பில் டியூக், ஹாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

சமீபகாலமாக இந்தியத் திரையுலகினருடன் இணைந்து பணிபுரிய விரும்புவதாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டு வரும் இவர், தர்பார் படத்தில் நடிக்க விரும்புவதாக ஏ.ஆர்.முருகதாஸை டேக் செய்து குறிப்பிட்டிருந்தார்.


தற்போது இயக்குநர் அட்லீயை டேக் செய்து ட்வீட் செய்திருக்கும் பில் டியூக், ஹாலிவுட்டிலிருந்து வாழ்த்துகள். நம்முடைய நாடுகள் இணைந்து படம் தயாரிப்பது ஏன் சிக்கல் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு பதிலளித்திருக்கும் இயக்குநர் அட்லீ, சிக்கல் என்பது வெறும் கருத்து மட்டுமே. சினிமா மீதுள்ள காதலின் காரணமாக பலதரப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து சுலபமாக்கியுள்ளனர். உங்களது இந்த அழைப்பைக் கவுரமாக கருதுகிறேன். இப்படித் தான் பெரிய கனவுகள் தொடங்குகின்றன. உங்களுக்கு என் அன்பும் மரியாதையும்” என்று கூறியுள்ளார்.

வீடியோ பார்க்க: சினிமாவில்தான் தைரியசாலி; நிஜத்தில்...! மனம் திறந்த தமன்னா

First published: October 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...