ஹோம் /நியூஸ் /entertainment /

சிங்கப் பெண்ணா? பையனா? குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லி மற்றும் பிரியா!

சிங்கப் பெண்ணா? பையனா? குட் நியூஸ் சொன்ன இயக்குநர் அட்லி மற்றும் பிரியா!

அட்லி மற்றும் பிரியா

அட்லி மற்றும் பிரியா

இயக்குநர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்களது மகிழ்ச்சிகரமான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர அவை ரசிகர்களை மனதைக் கவர்ந்துவருகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

'ராஜா ராணி' படத்தின் மூலம் இயக்குநர் அறிமுகமான இயக்குநர் அட்லி, தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற பிரம்மாண்டங்களை கொடுத்து இந்திய அளவில் பிரபலமானார். இதன் காரணமாக பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது.

ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் அட்லி கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தங்களது மகிழ்ச்சிகரமான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர அவை ரசிகர்களை மனதைக் கவர்ந்துவருகின்றன.

இருவருக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் பிரியா அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சி செய்தியை அறிவித்திருக்கிறார்.  அவரது பதிவில், ''நான் கர்ப்பமாக இருப்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. உங்கள் அன்பும் வாழ்த்தும் எங்களுக்கு தேவை. இப்படிக்கு அன்புடன் அட்லி மற்றும் பிரியா என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

First published:

Tags: Atlee, Atlee wife Priya, Pregnancy