’ஒட்டு மொத்த போலீசும் மோசமானவர்கள் அல்ல...’ ஹரியின் கருத்துக்கு பிரபல இயக்குநர் ரியாக்‌ஷன்

போலீசை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்காக வேதனைப்படுகிறேன் என்று இயக்குநர் ஹரி கூறியிருந்த நிலையில் அதற்கு இயக்குநர் அருண் வைத்தியநாதன் எதிர் கருத்து தெரிவித்துள்ளார்.

’ஒட்டு மொத்த போலீசும் மோசமானவர்கள் அல்ல...’ ஹரியின் கருத்துக்கு பிரபல இயக்குநர் ரியாக்‌ஷன்
இயக்குநர் சூர்யாவுடன் ஹரி
  • Share this:
தமிழகத்தில் கோவில்பட்டியை அடுத்துள்ள சாத்தான்குளத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடையைத் திறந்து வைத்திருந்ததன் காரணமாக கைது செய்யப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் சிறைச்சாலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால்தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவிக்க, சமூகவலைதளங்களிலும் #JusticeForJayarajandBennicks என்ற ட்விட்டர் ஹேஷ்டேக் மூலம் இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது.


காவல்துறையை பெருமைப்படுத்தி சிங்கம், சாமி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ஹரி, காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்களை இயக்கியதற்காக வேதனைப்படுகிறேன் என்று காட்டமான அறிக்கையை நேற்று வெளியிட்டார்.

ஹரியின் இந்தக் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவித்திருக்கும் இயக்குநர் அருண் வைத்தியநாதன்,  “சாத்தான் குளத்தில் நடந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். அதே நேரத்தில் ஒட்டுமொத்த போலீஸ் படையும் மோசமானது, கொடூரமானது என்ற கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. கோவிட் 19 பரவிய ஆரம்ப காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் போலீசாரால் பல நல்ல முயற்சிகள் செய்யப்பட்டன என்பதை தயவு செய்து மறந்துவிடாதீர்கள். சில கருப்பு ஆடுகளுக்காக ஒட்டுமொத்த துறையையும் மோசமானவர்கள் என்று பட்டியலிடுவதை நிறுத்துங்கள். எல்லா துறைகளிலும் கருப்பு ஆடுகள் உள்ளன.

சில திரைப்பட துறையைச் சேர்ந்தவர்கள், போலீசை பெருமைப்படுத்தி திரைப்படங்கள் இயக்கியதற்காக வெட்கப்படுகிறேன் என்று சொல்லும் நிலை உள்ளது. இது திரைப்பட ஸ்கிரிப்ட் அல்ல, சில லைக்குகளுக்காக இதுபோன்ற உணர்ச்சிகரமான கருத்துகளை தெரிவிக்க வேண்டாம்.

இந்த சம்பவம் குறித்து தீர விசாரித்து காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்பதுதான் அனைவரது எண்ணமாக இருக்க வேண்டும். அதற்காக ஒட்டுமொத்த காவல்துறை மீது கெட்ட வெளிச்சம் பாய்ச்ச வேண்டாம். ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு விரைவில் நீதி வழங்கப்படும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
First published: June 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading