அருவி திரைப்பட இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், கடந்த 21-ம் தேதி திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அந்தப் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட திரைப்படம் 'அருவி'. அதிதி பாலன் ஹீரோயினாக அறிமுகமான இந்தப் படத்தை இயக்கியவர் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். நடிகர் சிவகார்த்திகேயனின் உறவினரான அருண், டீனா என்பவரை நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் செய்துக் கொண்டார். இவர் சமீபத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வாழ்’ படத்தை இயக்கியிருந்தார்.
ஒரே ஹோட்டலில் தங்கியிருக்கும் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா?
இதையடுத்து புதுமணத் தம்பதிகளுக்கு ஆர்.டி.ராஜா உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள்
சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் முன்னணி ஹீரோவை வைத்து மூன்றாவது
படத்தை இயக்க தயாராகி வரும் அருண் பிரபுவுக்கு ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.