Home /News /entertainment /

பப்ஜிக்கு தடை விதித்திருப்பது அரசின் சிறந்த முடிவு - இயக்குநர் அறிவழகன் வரவேற்பு

பப்ஜிக்கு தடை விதித்திருப்பது அரசின் சிறந்த முடிவு - இயக்குநர் அறிவழகன் வரவேற்பு

PUBG

PUBG

பப்ஜிக்கு இந்திய அரசு தடைவிதித்திருப்பதற்கு இயக்குநர் அறிவழகன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

    இந்திய சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை நீடித்துவருகிறது. இந்தநிலையில், பப்ஜி உள்ளிட்ட 118 சீன ஆப்களை தடை செய்வதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டம் 69ஏ வின் கீழ் சீன ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

    இந்தியாவில் மட்டும் பப்ஜி கேமுக்கு 3.30 கோடி பார்வையாளர்கள் இருக்கும் நிலையில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது மத்திய அரசின் அறிவிப்பு. ஆனால் பப்ஜி விளையாடுவதால் ஏற்படும் மரணங்கள் இதன்மூலம் தடுக்கப்படும் என்றும் பலர் தெரிவிக்கின்றனர்.

    இந்நிலையில் பப்ஜிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதை இயக்குநர் அறிவழகன் வரவேற்றுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, "பப்ஜிக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டிருப்பது அரசின் சிறந்த முடிவு. பாதுகாப்பு காரணங்களைத் தாண்டி புதுமைகளைச் செய்யவிடாமல் குழந்தைகள், இளைஞர்களின் வளர்ச்சியைத் தடுப்பதில் பப்ஜி முக்கிய பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் இதை வரவேற்போர்கள். இந்தியாவில் உருவான பப்ஜி என்று எதுவும் வராது என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார் இயக்குநர் அறிவழகன்.



    ஈரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அறிவழகன். தொடர்ந்து வல்லினம், ஆறாது சினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்கலை இயக்கிய அறிவழகன் தற்போது அருண் விஜய், ரெஜினா நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

    கொரோனாவுக்கு முன்னர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஊரடங்கால் ரத்து செய்யப்பட்டது. தற்போது திரைப்பட படப்பிடிப்புகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில் விரைவில் அறிவழகன் இயக்கி வரும் படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என தெரிகிறது.
    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: PUBG

    அடுத்த செய்தி