முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / AR Murugadoss: அல்லு அர்ஜுனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்....?

AR Murugadoss: அல்லு அர்ஜுனை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்....?

ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ்

முருகதாஸுக்கு தெலுங்கு திரையுலகம் புதிதல்ல. சிரஞ்சீவி, மகேஷ்பாபுவை வைத்து இயக்கியிருக்கிறார்.

  • 1-MIN READ
  • Last Updated :

ஹெவி வெயிட் சாம்பியன் லைட் வெயிட் பிரிவில் மோதுவது அவமானம். அப்படியொரு நிலையில் இருக்கிறார்கள் தமிழின் முன்னணி இயக்குனர்கள். விஜய், ரஜினியை வைத்து படம் செய்துவிட்டு, சிம்பு, சிவகார்த்திகேயன் என்று வந்தால் நன்றாக இருக்குமா?

ஷங்கர் தனது பிரமாண்டத்துக்கு ஏற்ற நட்சத்திரம் அமையாமல், ரஜினியை வைத்தே பல படங்கள் இயக்கினார். அவரது 300, 400 கோடி கனவுக்கு ரஜினியை விட்டால் வேறு ஆளில்லை. அதனால், ராம் சரண், ரன்வீர் சிங் என்று தமிழைவிட மார்க்கெட் அதிகம் உள்ள தெலுங்கு, இந்திக்கு சென்றுள்ளார்.

முருகதாஸும் அப்படியே. விஜய் கால்ஷீட் இப்போது பிஸி. அதனால், தெலுங்கில் அல்லு அர்ஜுனை இயக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே லிங்குசாமி அதற்கு முயற்சி செய்து முடியாமல் இப்போது தெலுங்கு நடிகர் ராமை வைத்து ஒரு படத்தை தெலுங்கு, தமிழில் இயக்கி வருகிறார். முருகதாஸுக்கு தெலுங்கு திரையுலகம் புதிதல்ல. சிரஞ்சீவி, மகேஷ்பாபுவை வைத்து இயக்கியிருக்கிறார். ஆனாலும், அல்லு அர்ஜுனை இயக்குவது சாதாரணமில்லை. காரணம், டிமாண்ட்.

சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். அடுத்த கோடையில் கொரட்டல சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். அதற்கு முன் அவர் நடிக்கயிருக்கிற படத்தை இயக்க ஸ்ரீராம் வேணு, கேஜிஎப் இயக்குனர் பிரசாந்த் நீல், அனில் ரவிபுடி என மூன்று பேர் முயற்சி செய்கின்றனர். இவர்களுடன் நான்காவதாக முருகதாஸ்.

இவர்களில் முருகதாஸுக்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும், அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் தன்னுடைய கீதா ஆர்ட்ஸ் மூலம் இந்தப் படத்தை தயாரிப்பார் எனவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Allu arjun, AR Murugadoss