முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ 25 லட்சம் அளித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கொரோனா 2-ம் அலை மிக தீவிரமாகியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. நாள்தோறும் கொரோனா பாதிப்பு 30,000-த்தைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் விடுக்கின்றேன். இப்பேரிடர் காலத்தில் தாங்கள் ஒவ்வொருவரும் அளிக்கக்கூடிய நன்கொடைகள் அனைத்தும், ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் அமைத்தல், ஆக்சிஜன் வசதிகளுடன்கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செரிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் போன்ற கொரோனா நிவாரண நடவடிக்கைகளுக்கு மட்டுமே முழுமையாகப் பயன்படுத்தப்படும் என நான் உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து பிரபலங்களும், தொழிலதிபர்களும், பொதுமக்களும் கொரோனா நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். நடிகர் சூர்யா குடும்பத்தினர் 1 கோடி, அஜித் 25 லட்சம், உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம், விசாகன் - செளந்தர்யா ரஜினிகாந்தின் ஃபார்மா கம்பெனி சார்பில் 1 கோடி ரூபாய் என அந்த பட்டியல் நீள்கிறது. இந்நிலையில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கொரோனா நிவாரண நிதியாக ரூ 25 லட்சம் ரூபாயை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அளித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AR Murugadoss, MK Stalin