Home /News /entertainment /

லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் நடிக்க விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குநர்!

லோகேஷ் கனகராஜ் யூனிவர்ஸில் நடிக்க விரும்பும் பிரபல பாலிவுட் இயக்குநர்!

அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜ்

அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியானது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    விக்ரம், கைதி படங்களை ஒரே நேரத்தில் பார்த்துள்ள பாலிவுட் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் தானும் இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த ஜூன் மூன்றாம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. அத்துடன் ரசிகர்களும் படத்தை வெகுவாக கொண்டாடினர்.

    இந்த நிலையில் விக்ரம் திரைப்படம் வெளியாகி 100 நாட்கள் கடந்துள்ளது. இதைப் படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தப் படம் குறித்து பாலிவுட் சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப் பேசியுள்ளார். இவர் தமிழில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானார்.

    Also read... மம்முட்டி மற்றும் பிரித்விராஜ்க்கு நன்றி தெரிவித்த மணிரத்னம்!

    விக்ரம் படம் வெளியாவதற்கு முன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை பார்த்துவிட்டு விக்ரம் படத்தை பார்க்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதன் அடிப்படையிலேயே இந்த இரண்டு படங்களையும் தொடர்ந்து பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப் லோகேஷ் கனகாராஜை வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜின் யூனிவர்ஸில் தானும் இருக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Director Anurag Kashyap, Entertainment, Lokesh Kanagaraj

    அடுத்த செய்தி