மாஸ்டர் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் - இயக்குநர் அனுராக் பாசு

மாஸ்டர்

மாஸ்டர் திரைப்படம் போல் பாலிவுட்டிலும் ஒரு படம் வேண்டும் என்று இயக்குநர் அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. கொரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கிய காலகட்டத்தில் 50% இருக்கைகளுக்கு அனுமதி என்ற நிலையில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் பாய்ச்சியது.

மாஸ்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து பல்வேறு தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி வருகின்றன. மக்களும் திரையரங்கு நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் அனுராக் பாசு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “தென்னிந்தியாவில் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படம் ரசிகர்களை தியேட்டருக்கு வரச் செய்த ஒரு படம். அப்படி ஒரு படம் பாலிவுட்டிலும் வர வேண்டும்.

படைப்பாற்றல் சுதந்திரத்துக்கும், அதை தவறாக பயன்படுத்துவதற்கும் இடையே ஒரு மெல்லிய கோடு இருக்கிறது. ஓடிடி தளங்களிலும் அது இருக்கிறது”என்று கூறியுள்ளார்.

மர்டர், கேங்ஸ்டர், பர்ஃபி, கைட்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் அனுராக் பாசு. சமீபத்தில் இவர் இயக்கிய ‘லூடோ’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் பிப்ரவரி 28-ம் தேதி தொலைக்காட்சியில் திரையிடப்படவுள்ளது.

மேலும் பார்க்க: நீச்சல் குளத்தில் சன்னி லியோன்..செம ஹாட் போட்டோஸ்!

ஆரம்பத்தில் லூடோ திரைபப்டம் திரையரங்கில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அது கொரோனா லாக்டவுன், திரையரங்கு மூடல் உள்ளிட்ட காரணங்களால் அது முடியாமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: