Home /News /entertainment /

இது கனவாக இருக்கக் கூடாதா? தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

இது கனவாக இருக்கக் கூடாதா? தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர்

ஐஸ்வர்யா தனுஷ் - எஸ்.ஏ.சந்திரசேகர்

ஐஸ்வர்யா தனுஷ் - எஸ்.ஏ.சந்திரசேகர்

கணவன், மனைவியும் முழுவதுமான புரிதலோடும், 100% ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்களா? என்று கேட்டால் யாரும் கிடையாது. குத்தம், குடைச்சல், பிக்கல் பிடுங்கல் என்று குத்தம், கடந்து தான் கணவன் மனைவி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேலும் படிக்கவும் ...
  நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து, இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

  நடிகர் தனுஷ் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை இரவு அறிவித்தனர். இருவரும் சமூகவலைதளங்களில் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு, தாங்கள் பிரிவதை உறுதிப்படுத்தினர்.

  அந்த அறிக்கையில் “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

  இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர். இது பிரபலங்கள், ரசிகர்கள் என பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “செய்தியை கேள்வி பட்டதிலிருந்தே மனம் என்னவோ போலிருக்கிறது. கணவன், மனைவியும் முழுவதுமான புரிதலோடும், 100% ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்கிறார்களா? என்று கேட்டால் யாரும் கிடையாது. குத்தம், குடைச்சல், பிக்கல் பிடுங்கல் என்று குத்தம், கடந்து தான் கணவன் மனைவி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவு குறித்து முன்பே ட்விட்டரில் குறிப்பிட்ட செல்வராகவன்?

  அறிமுகமில்லாதவர்கள் விவாகரத்து செய்தாலே என்னால் அதை தாங்கிக்கொள்ள இயலாது. அவர்களிடம் எனக்கு அந்த அளவு நெருக்கமும் இருக்காது, இருப்பினும் நானும் என் மனைவியும் அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களை சமாதானப்படுத்தி அவர்களை சேர்ந்து வாழவைக்க முயற்சிகள் செய்வோம். அப்படி 7 ஆண்டுகள் பிரிந்திருந்த ஒரு தம்பதியை சேர்த்து வைத்திருக்கிறோம்.

  அப்படி இருக்கையில் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் பிரிகிறார்கள் என்று தெரியவரும்போது எப்படி தாங்கிக்கொள்ள முடியும். பிரச்சனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை, பிரச்சனைகள் இல்லையெனில் அது வாழ்க்கையே இல்லை. எனவே மனிதர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும், அதை நாம் பேசி சரிசெய்துகொள்ளலாம்.

  Dhanush Aishwarya Rajinikanth: தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் - ஆச்சர்யப்படாத நண்பர்கள்!

  நமக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி தேடி, என்று கண்ணதாசன் ஒரு படத்தில் பாடியிருந்தார். நமக்கும் கீழே மோசமாக வாழ்பவர்கள் கோடிப் பேர்கள். அவர்களை நினைத்து பார்த்து வாழ வேண்டும். பிரச்னை இல்லாத வாழ்க்கை இல்லை, பிரச்சனை இல்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை. ஆகவே காலையில் இருந்து இந்த பதிவை போடலாமா? வேண்டாமா? என்று யோசித்துக் கொண்டிருந்தேன். உள்ளே வைத்துக் கொள்ள முடியாமல் தான் இந்த பதிவை நான் போடுகிறேன். காலையில் நான் படித்த விஷயம் காணாமல் போய் விடணும் அல்லது பொய்யாக போய்விடணும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது.

  Dhanush: நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட தனுஷ்...

  நான் மற்றவர்களுக்கு அறிவுரை கூறுவதாக நினைக்கவேண்டாம். இருந்தாலும் நாம் வாழ்க்கையை எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேடவேண்டும். பணமோ, நிம்மதியா, சந்தோஷமோ அதை நாம் எங்கு தொலைத்தோமோ அங்கு தான் தேட வேண்டும். இதை நான் ஒரு நலன் விரும்பியாக மற்றும் ஒரு ரசிகனாக சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: Actor dhanush, Aishwarya Dhanush, Dhanush, Director S.A.Chandrasekar

  அடுத்த செய்தி