2டி தயாரிப்பில் பாலா இயக்கும் படத்தில் மொழி படத்தின் வசனகர்த்தாவும், வெள்ளித்திரை படத்தின் இயக்குனருமான விஜி இணைந்துள்ளார்.
தாரைதப்பட்டை படத்துக்குப் பிறகு பாலா இயக்கத்தில் எந்தப் படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. அவர் இயக்கிய வர்மா படத்தை தயாரிப்பாளர்கள் நிராகரித்தது பாலாவுக்கு மேலும் பின்னடைவை தந்தது. இந்நிலையில், பாலாவின் அடுத்தப் படைப்பை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் படத்தை பாலா இயக்குகிறார். இதில் அதர்வா நாயகனாவும், சூர்யா கௌரவ வேடத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது. இல்லை சூர்யாதான் நாயகன் என வேறொரு தரப்பு கூறுகிறது. ஹீரோ யார் என்பது இன்னும் முறைப்படி அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் திரைக்கதை, வசனத்தை விஜி எழுதியிருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.
Also read... கணவன், மனைவியாக நடிக்கும் வெங்கட் பிரபு, சினேகா...!
விஜி பிரபுதேவா, லைலா நடித்த அள்ளித் தந்த வானம், பிரகாஷ்ராஜ் நடித்த வெள்ளித்திரை ஆகிய படங்களை இயக்கியவர். ராதா மோகனின் மொழி உள்பட சில படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுடன் இணைந்து பணியாற்றிய பாலா இந்தமுறை விஜியுடன் இணைந்துள்ளார்.
படத்தின் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருவதால் விரைவில் படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Director bala