இக்கட்டான சூழ்நிலையிலும் விசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்

இக்கட்டான சூழ்நிலையிலும் விசுவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்
விசுவின் உடலுக்கு மனோபாலா அஞ்சலி
  • Share this:
மறைந்த நடிகர் மற்றும் இயக்குநர் விசுவின் உடலுக்கு மனோபாலா, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

நடிப்பது மட்டும் அல்லாது எழுத்தாளர், இயக்குநர், நாடக நடிகர், தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர் தான் விசு. 1945-ம் ஆண்டு பிறந்த விசுவின் முழுபெயர் M.R விஸ்வநாதன். இவர் முதன்முதலில் கே.பாலசந்தரிடம் துணை இயக்குநராக பணியாற்றினார். அப்போது சிறுசிறு கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார். விசு நடித்த முதல்படம் ரஜினியின் தில்லு முல்லு. அந்தப் படத்தில் இவர் டப்பிங்கும் செய்துள்ளார்.

மேலும் குடும்பம் ஒரு கதம்பம் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் கண்மணி பூங்கா என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். மேலும் மணல் கயிறு, சிதம்பர ரகசியம், புதிய சகாப்தம் போன்ற படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார் விசு.


இவர் கடைசியாக இயக்கி நடித்த படம் தங்கமணி ரங்கமணி. 72 வயதாகும் விசு சீரியல்களில் நடித்ததோடு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். உமா என்ற பெண்னை திருமணம் செய்துகொண்ட விசுவிற்கு 3 மகள்கள் உள்ளனர்.

வயது முதிர்வு மற்றும் சிறு நீரக கோளாறு காரணத்தால் வீட்டில் ஒய்வு எடுத்து வந்தார். சமீபகாலமாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை எடுத்து வந்த விசு இன்று மாலை உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மற்றும் குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க நேற்று ஒரு நாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டதை அடுத்து விசுவின் மரணத்துக்கு பலரும் இரங்கல் மட்டுமே தெரிவித்திருந்தனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாது ஒரு சிலர் நேரில் சென்று விசுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.


மேலும் படிக்க: என்னுடைய பதிவை ஏன் ட்விட்டர் நீக்கியது? - ரஜினி விளக்கம்

First published: March 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்