• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எனது உழைப்பை ஆங்கில படத்தில் பயன்படுத்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் - நோட்டீஸ் அனுப்பிய பாபு கணேஷ்

எனது உழைப்பை ஆங்கில படத்தில் பயன்படுத்திவிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான் - நோட்டீஸ் அனுப்பிய பாபு கணேஷ்

பாபு கணேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான்

பாபு கணேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான்

தனது கான்செப்டை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திவிட்டதாகவும் அதற்காக அவருக்கு சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் இயக்குநர் பாபு கணேஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கடல்புறா படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குநராக அறிமுகமானவர் பாபு கணேஷ். தொடர்ந்து இரவு பாடகன், தீர்ப்புகள் மாற்றப்படும் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், திரையரங்குகளில் முதல்முறையாக வாசனையை அறிமுகப்படுத்தினார்.

    இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது கான்செப்டை பயன்படுத்தி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இதுகுறித்து பாபு கணேஷ் கூறுகையில், “நான் தமிழ் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளாகின்றன. கடந்த 2000-ம் ஆண்டில் நாகலிங்கம் என்ற திரைப்படத்தை சாம்பிராணி வாசனையுடன் அனைத்து திரையரங்குகளிலும் வெளியிட்டேன். அது லிம்கா உள்ளிட்ட பல சாதனை பட்டியலில் இடம்பெற்றன.

    2012-ம் ஆண்டு அதே கான்செப்டை பயன்படுத்தி நானே வருவேன் என்ற பேய் படத்தில் சூழலுக்கேற்ப தாழம்பூவின் மணத்துடன் திரைப்படம் உருவாக்கி திரையிட்டேன். அதைத்தொடர்ந்து காட்டுப்புறா என்ற உலகில் முதல் வாசனை குழந்தைகள் திரைப்படத்தை உருவாக்கினேன்.

    இதே கான்செப்டை வைத்து ஏ.ஆர்.ரஹ்மான் லீ மஸ்க் என்ற படத்தை தயாரித்திருக்கிறார். என்னுடைய கான்செப்டை பயன்படுத்தியதற்காக அவருக்கு இ-மெயில், கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டேன். மேலும் இயக்குநர் சங்கம், இசைக்கலைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல வழிகளில் அவரிடம் விளக்கம் கேட்டும் பதிலில்லை.




    படிக்க: கொரோனா தொற்று உள்ளதா என 15 நிமிடங்களில் கண்டறியும் ஆன்டிபாடி சோதனை - பொதுமக்களுக்கு எப்போது?

    படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..








    என்னுடைய கான்செப்டை ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்தியது எனக்கு பெருமை தான். அவர் இந்த முயற்சியை எடுத்துக் கொண்டதால் காட்டுப்புறா படத்தின் ரிலீசில் சிக்கல் எழுந்துள்ளது. படத்தின் இந்த புதிய முயற்சியை நம்பித்தான் ஃபைனான்சியர்கள் எனக்கு பணம் கொடுத்தார்கள்.

    ஒருமுறை என்னை ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் அவர் அதை செய்யவில்லை. எனக்கு இது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் கான்செப்ட் திருட்டு என்ற அடிப்படையில் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: