காதலியைக் கரம்பிடித்தார் இயக்குநர் ஆனந்த் சங்கர்!

Web Desk | news18
Updated: July 11, 2019, 6:45 PM IST
காதலியைக் கரம்பிடித்தார் இயக்குநர் ஆனந்த் சங்கர்!
தனது காதலியுடன் இயக்குநர் ஆனந்த் சங்கர்
Web Desk | news18
Updated: July 11, 2019, 6:45 PM IST
இயக்குநர் ஆனந்த் சங்கர் - திவ்யங்கா ஜீவானந்தம் திருமணம் இன்று நடைபெற்றது.

பிரபல இயக்குநராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து, விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆனந்த் சங்கர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து விக்ரம், நயன்தாரா நடித்த இருமுகன் படத்தை இயக்கினார்.

இந்தப் படத்தில் நடிகர் விக்ரம் இரண்டு தோற்றங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘நோட்டா’ படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் இயக்கினார்.

இந்நிலையில் இயக்குநர் ஆனந்த் சங்கர் திவ்யா ஜீவானந்தம் என்ற பெண்ணை காதலிப்பதாகவும், நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படங்களையும் கடந்த நவம்பர் மாதத்தில் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

இதைத்தொடர்ந்து இன்று இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தில் குடும்பத்தினர் மற்றும் சில திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வீடியோ பார்க்க: தனது வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்த நண்பருக்காக அதிரடி முடிவெடுத்த சிவகார்த்திகேயன்!

First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...