மாறனில் தனுஷுடன் இணையும் அமீர்...?

தனுஷ் மற்றும் அமீர்

மாறன் படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க அமீரை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
கார்த்தின் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் மாறனில் முக்கிய வேடம் ஒன்றில் இயக்குனர் அமீர் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பருத்திவீரன் என்ற சிறந்தப் படத்தை தந்த இயக்குனர் அமீர், ஹீரோக்கள் மீது கொண்ட கோபத்தால் நடிக்க ஆரம்பித்தார். அது அவரது இயக்குனர் வாழ்க்கைக்கே பெரும் அடியாக அமைந்தது. சில வருடங்கள் முன் ஆர்யா மற்றும் அவரது தம்பி சத்யாவை வைத்து சந்தனத் தேவன் என்ற படத்தை தொடங்கினார். அது பாதியிலேயே கைவிடப்பட்டது. அதற்குப் பின் இதுவரை இயக்கம் பக்கம் அவர் திரும்பவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வடசென்னை படத்தில் நடித்ததே அவரது சமீபத்திய சினிமா செயல்பாடு. நாலைந்து வருடங்களுக்கு முன் பெரியோர்களோ தாய்மார்களே என்ற பெயரில் அமீரை நாயகனாக்கி ஒரு அரசியல் படம் தொடங்கப்பட்டது. பல வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட அந்தப் படத்தின் இயக்குனரை மாற்றி, விஇஸட் துரையின் கையில் இயக்குனர் பொறுப்பை ஒப்படைத்தனர். நாற்காலி என படத்தின் பெயர் மாற்றப்பட்டது. படத்தின் முதல் பாடலை எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். அந்தப் படமும் எந்த சலனமும் இன்றி கிடப்பில் உள்ளது.

இந்நிலையில், மாறன் படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க அமீரை அணுகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மாறனின் தற்போதைய படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. நாயகி மாளவிகா மோகனனின் காட்சியை எடுத்து வருகின்றனர். மாறன் படத்துடன் திருச்சிற்றம்பலம் படத்திலும் தனுஷ் நடிப்பதால் மாறனின் படப்பிடிப்பு வேகம் தடைபட்டுள்ளது

Also read... ஹரி, அருண் விஜய் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

மாறன் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, பாடல்களை விவேக்கும், கார்த்திக் நரேனும் எழுதுகின்றனர். த்ரில்லர் படமாக தயாராகும் இதில் தனுஷும், மாளவிகா மோகனனும் பத்திரிகையாளர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது.
Published by:Vinothini Aandisamy
First published: