Home /News /entertainment /

தாயார் இறந்ததால் மெக்கா புனித பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட அமீர்..

தாயார் இறந்ததால் மெக்கா புனித பயணத்தை பாதியில் முடித்துக்கொண்ட அமீர்..

இயக்குனர் அமீர்

இயக்குனர் அமீர்

Director Ameer | மெக்காவிலிருந்து அமீர் மதுரை திரும்பும் நிலையில், அவரின் மகள் மற்றும் மனைவி ஆகியோர் அங்கேயே உள்ளனர்.

  • News18
  • Last Updated :
மெக்கா (Mecca) புனித பயணம் சென்ற இயக்குனர் அமீர் தன்னுடைய தாயார் இறந்ததால் பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு மதுரை திரும்புகிறார்.

மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அமீர். இவர் தற்போது இயக்கம், நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

பிரபல இயக்குனர் என பெயர் எடுத்துள்ள அவர், தற்போது மனைவி மற்றும் மகளுடன் ஹச் புனித பயணம் சென்றுள்ளார்.  கடந்த இரண்டாம் தேதி அவர், தன்னுடைய குடும்பத்தினருடன் மெக்காவில் 16-ம் தேதியுடன் அங்கு தங்குவதாக திட்டமிட்டார்.

இந்த நிலையில் இயக்குனர் அமீரின் தாயார் பாத்து முத்து (வயது 85) உடல் நலக்குறைவு காரணமாக மதுரையில் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து மெக்கா சென்றிருக்கும் அமீர் இன்று மதுரை திரும்புகிறார்.

Also read... 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மோதிக்கொள்ளும் பார்த்திபன் - லிங்குசாமி படங்கள்

இரவு திருச்சி விமான நிலையத்துக்கு வரும் அவர், அங்கிருந்து காரின் மூலமாக மதுரை செல்கிறார். அவரின் தாயார் இறுதி சடங்கு நாளை காலை 10 மணி அளவில் மதுரை நெல் பேட்டை சுங்கம் பள்ளிவாசல் மையவாடியில் நடைபெறுகிறது. மெக்காவிலிருந்து அமீர் மதுரை திரும்பும் நிலையில், அவரின் மகள் மற்றும் மனைவி ஆகியோர் அங்கேயே உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director ameer, Entertainment

அடுத்த செய்தி