Home /News /entertainment /

இயக்குநர் அமீர் வீட்டில் நிகழ்ந்த சோகம்... ஆறுதல் கூறும் திரையுலகினர்

இயக்குநர் அமீர் வீட்டில் நிகழ்ந்த சோகம்... ஆறுதல் கூறும் திரையுலகினர்

இயக்குநர் அமீர்

இயக்குநர் அமீர்

திரைப்படங்களிலும் நடித்து வரும் அமீர், டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    இயக்குநர் அமீரின் தாயார் பாத்துமுத்து பீவி வயது முதிர்வின் காரணமாக காலமாகியுள்ளார். 

    தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநராக வலம் வருபவர் அமீர். மதுரையை சேர்ந்த இவர் பொருளாதாரம் படித்து விட்டு சில காலம் பிஸினெஸ் செய்துள்ளார். பின்னர் இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக இணைந்து, அவரின் சேது மற்றும் நந்தா ஆகியப் படங்களில் பணியாற்றியுள்ளார்.

    பின்னர் 2002-ம் ஆண்டு மெளனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் நந்தாவில் நடித்த சூர்யாவும், லைலாவும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதோடு த்ரிஷா நடிப்பில் வெளியான முதல் படமும் இது தான்.

    பின்னர் ராம், பருத்திவீரன், ஆதி பகவன் ஆகியப் படங்களை இயக்கினார். இதில் பருத்தி வீரன் படத்துக்காக பல விருதுகளையும் பெற்றார். கார்த்தி அறிமுகமான இப்படம், அவருக்கு பாஸிட்டிவ் விமர்சனக்களைப் பெற்றுத் தந்தது. அதோடு பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும், ராஜா முகமதுவுக்கு சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதையும் பெற்றுத் தந்தது. திரைப்படங்களிலும் நடித்து வரும் அமீர், டீம் ஒர்க் புரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்... நா.முத்துக்குமார் பிறந்த தினம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் அமீரின் தாயார் பாத்திமுத்து பீவி வயது முதிர்வால் காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Director ameer

    அடுத்த செய்தி