Home /News /entertainment /

மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்காவிடில் அரசுக்கு மிக பெரிய தலைகுனிவு ஏற்படும் - இயக்குநர் அமீர்

மாணவர்களின் தொடர் மரணங்களை தடுக்காவிடில் அரசுக்கு மிக பெரிய தலைகுனிவு ஏற்படும் - இயக்குநர் அமீர்

கவிஞர் சிநேகன், இயக்குநர் அமீர், இயக்குநர் கரு பழனியப்பன்

கவிஞர் சிநேகன், இயக்குநர் அமீர், இயக்குநர் கரு பழனியப்பன்

பள்ளி மாணவர்களின் இறப்பு என்பது மாநில அரசுக்கு கிடைக்கும் அவமானம் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
பள்ளிகளில் மாணவர்களின் தொடர் மரணங்களை  தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் மிக பெரிய தலைகுனிவாக அமையும் என்றும் புதுச்சேரியில்  திரைப்பட இயக்குனர் அமீர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில்  தனியார் நிகழ்வில் பங்கேற்க வந்த திரைப்பட இயக்குனர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், 2014 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் மக்களுக்கான ஆட்சி நடைபெறவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சியாகவே தான் நடந்து கொண்டிருக்கிறது. இனிமேல் அதே பாதையில் தான் அவர்கள் பயணிப்பார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றார்.

மேலும், ஆளுநர் மூலமாக ஆட்சியைக் கவிழ்த்து அவர்களது ஆட்சியை அமைப்பது அல்லது எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அதிகாரத்திற்கு வருவது தான் பாஜகவின் கொள்கையாக உள்ளது. தனக்கு எதிரியான யாராவது வந்தால் அவர்கள்  மீது வழக்குப் போடுவது அல்லது ஆளையே காலி பண்ணுவது தான் இந்த ஆட்சியில்  நடக்கிறது.

எந்த காலத்திலும் அவர்கள் மாறப்போவதில்லை என விமர்சித்த இயக்குனர் அமீர், ஜனநாயகத்தின் பெயரில் நடைபெறும் கொடுங்கோல் ஆட்சி இது. மக்கள் அதை கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்துள்ளனர். வடமாநிலத்தில் இதன் தாக்கம் அதிகமாக தெரிகிறது. ஆனால் அங்கு நடப்பது தென்னிந்தியாவிற்கு சொல்லப்படுவதில்லை. வருங்காலத்தில் இது எதிரொலிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும், இலங்கையின் தாக்கம் இந்தியாவிற்கு வருவதற்கு ரொம்ப நாள் இல்லை என்றும் கூறினார்.

Also read... செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்க வாய்ப்பு கிடைத்தது பெருமையளிக்கிறது - விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தும் தமிழக அரசுக்கு வாழ்த்துக்கள் என்ற அவர், பள்ளி மாணவர்களின் இறப்பு என்பது மாநில அரசுக்கு கிடைக்கும் அவமானம். பள்ளிகளில் நடைபெறும் தொடர் மரணங்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் இல்லையென்றால் அரசு தலைகுனிந்து நிற்கும் என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கையை விட போராட்டக்காரர்கள் மீது அதிகம் நடவடிக்கை எடுக்கப்படுவது வருத்தத்திற்குரியது என்றும் இயக்குனர் அமீர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Director ameer, Puducherry

அடுத்த செய்தி