Home /News /entertainment /

இதுவரை பொதுவெளியில் யாருக்கும் வாழ்த்து சொன்னதில்லை - மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் அமீர் பிறந்தநாள் வாழ்த்து!

இதுவரை பொதுவெளியில் யாருக்கும் வாழ்த்து சொன்னதில்லை - மு.க.ஸ்டாலினுக்கு இயக்குநர் அமீர் பிறந்தநாள் வாழ்த்து!

மு.க.ஸ்டாலின் - அமீர்

மு.க.ஸ்டாலின் - அமீர்

தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

    இதுவரை தான் யாருக்கும் பொதுவெளியில் பிறந்தநாள் வாழ்த்து சொன்னதில்லை என்றும், முதன்முறையாக தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதாகவும் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அரசியல், திரைப்பிரபலங்களும், தொண்டர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகருமான அமீர் வாழ்த்து மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், இதுவரை பொதுவெளியில் யாருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லாத நான், ”சமூகநீதிக் காவலரின் வாரிசு”க்கு முதன் முறையாக இதயம் திறந்த வாழ்த்து மடல்.

    சூரிய நெருப்பில் உதித்து..
    காரிய இருளைத் தகர்த்து..
    ஆருடத்தை பொய்யாக்கி
    ஆரியத்தை பொடியாக்கி..

    ஆட்சிக் கட்டிலை
    அடித்தட்டு மக்களுக்கே..
    அர்ப்பணித்த
    இந்திய முதல்வனே..!

    இன்னும் பல காலம் நீயிருக்க
    எல்லாம் வல்ல இறைவனை
    பிரார்த்திக்கிறேன் – அது
    காலத்தின் தேவை..

    சமூக நீதி தழைக்க..
    சமய நீதி ஓழிக்க..
    சமுதாயம் செழிக்க..
    சனநாயகம் சிறக்க..
    அன்புடன்
    அமீர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    சன் டிவி வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், திமுக-வின் அடிப்படை உறுப்பினராக தனது வாழ்க்கையை தொடங்கி, படிப்படியாக ஒவ்வொரு பொறுப்புகளையும் சிறப்பாக செய்து இன்று தமிழக முதல்வராகியிருக்கிறார். அவர் தனது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எழுதிய உங்களில் ஒருவர் புத்தகம் நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Ameer, MK Stalin

    அடுத்த செய்தி