Home /News /entertainment /

வாடிவாசலில் சூர்யாவுடன் நடிக்கும் அமீர்...!

வாடிவாசலில் சூர்யாவுடன் நடிக்கும் அமீர்...!

அமீர்

அமீர்

வாடிவாசலில் அறுபதுகளில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை காண்பிக்க இருக்கிறார் வெற்றிமாறன்.

  • News18
  • Last Updated :
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் இயக்குனர் அமீரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

நந்தா படத்தில் சூர்யாவின் நடிப்பின் திசை தீர்மானிக்கப்பட்டது. அதில் இருந்த ராவான தன்மையை நீக்கி அவரை லவ்லியாக காண்பித்தவர் அமீர். அவரது மௌனம் பேசியதே இன்றும் பலரது ஆதர்ஷ படம். பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அட்டகாசமான அறிமுகத்தை அளித்தவரும் அமீரே. அப்போது ஏற்பட்ட சில பிரச்சனைகளால் சிவகுமார் குடும்பத்துடன் அமீருக்கு உரசல் ஏற்பட்டது. காலம்தானே இதுபோன்ற விஷயங்களில் களிம்பு?

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் அமீரும் நடிக்கிறார். வடசென்னை படத்தில் அமீரின் நடிப்பு பேசப்பட்டதால் வாடிவாசலிலும் அவரை பயன்படுத்துவது என வெற்றிமாறன் தீர்மானித்துள்ளார். வாடிவாசல் சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படுகிறது.

வெக்கை நாவலை அசுரனாக எடுத்த போது, வெக்கையில் இல்லாத சிவசாமியின் இளமைக்கால போர்ஷனை கற்பனையாகச் சேர்த்து, அதில் ஆதிக்க சாதிவெறியையும், அதனை எதிர்கொண்ட இளவயது சிவசாமியையும் வெற்றிமாறன் காட்டியிருந்தார்.

Also read... இஸ்லாமியர்களின் பிரச்சனையை பேசும் விஷ்ணு விஷாலின் FIR- படங்கள்!

கிட்டத்தட்ட பாட்ஷா போன்ற எபிசோடு. வாடிவாசலில் அறுபதுகளில் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை காண்பிக்க இருக்கிறார் வெற்றிமாறன். இந்தப் போராட்டம் நடக்கும் காலகட்டத்தின் பின்னணியில் கதை நடப்பதாக நாவலில் இருந்து மாறுபட்டு திரைக்கதையை எழுதியுள்ளார்

இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழக மக்களின் மனதோடு கலந்தது. அதனை திரையில் வெற்றிமாறன் கண்டிப்பாக வீரியமாகவே காண்பிப்பார். வாடிவாசல் வெற்றி பெற இதைவிட வேறு விஷயங்கள் வேண்டுமா என்ன?
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Actor Suriya, Director ameer, Director vetrimaran

அடுத்த செய்தி