Home /News /entertainment /

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் மரணம்

இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் மரணம்

இயக்குநர் ஏ.எல்.விஜய் குடும்பம்

இயக்குநர் ஏ.எல்.விஜய் குடும்பம்

80 வயதான வள்ளியம்மை தனது கணவர், மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

    இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் தாயார் வள்ளியம்மை வயது மூப்பின் காரணமாக காலாமானார். 

    அஜித்தின் கிரீடம், ஆர்யாவின் மதராசப்பட்டினம், விஜய்யின் தலைவா, விக்ரமின் தெய்வ திருமகள் உள்ளிட்டப் படங்களை இயக்கி பிரபலமானவர், பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய். இவரது தாயார் வள்ளியம்மை வயது மூப்பு காரணமாக நேற்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் ஜூலை 18 ஆம் தேதியான இன்று நடைபெறுகிறது.

    வள்ளியம்மை மூத்த திரைப்பட தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மனைவி. அவரது மூத்த மகன் உதயா நடிகரும் திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். வள்ளியம்மை தனது கணவர், மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தார். நடிகை அமலா பாலுடனான விவாகரத்துக்குப் பிறகு, ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார் விஜய்.

    தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை செளந்தர்யா பிறந்த தினம்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதற்கிடையே ஏ.எல்.விஜய் தாயாரின் மறைவுச் செய்தியறிந்து, அவரின் நெருங்கிய நண்பரான ஜி.வி.பிரகாஷ்குமார் தனது குடும்பத்தினருடன் விஜய் வீட்டுக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். கங்கனா ரனாவத் மற்றும் அரவிந்த் சுவாமி நடிப்பில் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 'தலைவி' படத்தை கடைசியாக இயக்கிய விஜய், தற்போது அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.
    Published by:Shalini C
    First published:

    Tags: Tamil Cinema

    அடுத்த செய்தி