AL Vijay: மகனின் முதல் பிறந்தநாளை விமர்சையாகக் கொண்டாடிய ஏ.எல்.விஜய்!

ஏ.எல்.விஜய் மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்

மிகப்பெரிய கேக் ஒன்றை வாங்கி வைத்து, அலங்கார தோரணைகளுக்கு இடையே குடும்பத்தினர் புடைசூழ துருவ் கேக் வெட்டியுள்ளார்.

  • Share this:
மகன் துருவின் முதல் பிறந்நாளை குடும்பத்தினருடன் இயக்குநர் விஜய் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

பிரபல தயாரிப்பாளரின் மகனான இயக்குநர் ஏ.எல் விஜய், தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநராகவும் உள்ளார். அஜீத் மற்றும் திரிஷா நடித்த கிரீடம் படத்தை இயக்கி, தமிழ் திரைபடத்துறையில் காலடி எடுத்து வைத்தார். முதல் படத்திலேயே அஜித்தின் கால்ஷீட்டைப் பெற்று படத்தை இயக்கியதால், அனைவரது பார்வையும் இயக்குநர் விஜய் பக்கம் திரும்பியது. அடுத்து பொய் சொல்லப் போறோம் என்ற காமெடி படத்தை இயக்கிய அவர், ஆர்யா - எமி ஜாக்சன் கூட்டணியில் மதராசப்பட்டினம் படத்தை இயக்கி, அனைவரது புருவத்தையும் உயரச் செய்தார்.

சென்னையின் வரலாற்றை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய அந்த படத்தின் காட்சி அமைப்புகள் பழமை மாறாமல், அந்த கால சென்னையை அப்படியே பிரதிபலிப்பதாக இருந்தது. அவரின் சீரிய முயற்சிக்கு பல தரப்புகளில் இருந்து பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவியத் தொடங்கியது. முன்னணி இயக்குநராக உருவெடுத்த இயக்குநர் ஏ.எல்.விஜய், விஜய் - அமலா பால் கூட்டணியில் தலைவா படத்தை இயக்கினார். இந்தப் படம், அரசியல் ரீதியாக நெருக்கடிகளுக்குள்ளாகி, ஒருவழியாக வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு அடித்தளமிடும் வகையில் இந்தப் படம் இருந்ததாகவும் பேசப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பின்னர், விக்ரமுடன் இணைந்து தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய படங்களை இயக்கினார். அடுத்தடுத்த படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்த விஜய்யின் மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத், ஜெயலலிதாவின் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படம் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தன்னுடைய மகிழ்ச்சி ஒன்றை பொதுவெளியில் இயக்குநர் ஏ.எல்.விஜய் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது, தன்னுடைய மகன் துருவின் முதல் பிறந்தநாளை குடும்பத்தினருடன் வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளார். அமலாபாலுடன் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தபிறகு 2019-ஆம் ஆண்டு மருத்துவர் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் மகனான துருவ் தன்னுடைய பிறந்தநாளை, அழகான உடையணிந்து மகிழ்ச்சியாக கொண்டாடினார். அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளன.

மிகப்பெரிய கேக் ஒன்றை வாங்கி வைத்து, அலங்கார தோரணைகளுக்கு இடையே குடும்பத்தினர் புடைசூழ துருவ் கேக் வெட்டியுள்ளார். அவரை கைகளில் ஏந்தி புன்னகையுடன் இருக்கும் இயக்குநர் விஜய்யின் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர். மேலும், விஜய்யின் மகனுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: