விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து தற்போது டிமான்டி காலனி 2 படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.
அருள் நிதியின் அசத்தலான நடிப்பில் அஜய் ஞான முத்து இயக்கத்தில் கடந்த 2015-ல் டிமான்டி காலனி படம் வெளிவந்தது. ஹாரர் ஜேனரில் வெளிவந்த இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதில் அருள் நிதியுடன் எம்.எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், சிங்கம் புலி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
டிமான்டி காலனி வெற்றியைத் தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர் விஜய் சேதுபதி, அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யப் நடித்த இமைக்கா நொடிகள் படத்தை அஜய் ஞானமுத்து இயக்கினார்.
சிறிய முதலீட்டில் மாபெரும் வசூல்... 300 சதவீதம் லாபம் சம்பாதித்த காத்து வாக்குல ரெண்டு காதல்
இமைக்கா நொடிகள் படத்தில் சில காட்சிகள் நம் பொறுமையை சோதித்தாலும், ஒட்டு மொத்த அளவில் ஓகே ரகமான படமாக அமைந்தது. இந்த படத்தை தொடர்ந்து, விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்க ஆரம்பித்தார். சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவு பெற்றது.
ஆகஸ்ட் 11ம் தேதி கோப்ரா படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.
காட்டுவாசி லுக்கில் பிறந்தநாளை கொண்டாடிய ராய் லட்சுமி.. ஏன் தெரியுமா ?
இந்நிலையில் டிமான்டி காலனி 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தயாரிக்கும் அஜய் ஞானமுத்து, படத்திற்கு கதையும் எழுதியுள்ளார். அவரிடம் இணை இயக்குனராக இருந்த வெங்கி வேணுகோபால் படத்தை இயக்குகிறார்.
சுமார் 3 ஆண்டுகள் கோப்ரா படத்தில் பிஸியாகி இருந்த அஜய் ஞானமுத்து தற்போது டிமான்டி காலனி 2 படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.
முதல் பாகத்தை மிஞ்சும் வகையில் டிமான்டி காலனி 2 திரைப்படம் மிரட்டலாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.