தந்தையின் உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்த இயக்குநர்

தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற இளம் இயக்குநர் ஒருவர் கல்லீரல் தானம் செய்துள்ளார்.

தந்தையின் உயிரைக் காப்பாற்ற கல்லீரல் தானம் செய்த இயக்குநர்
இயக்குநர் ஆதின் ஒல்லூர்
  • Share this:
மலையாள சினிமாவில் இளம் இயக்குநர் ஆதின் ஒல்லூர். இவர் இயக்கத்தில் Pennanveshanam என்ற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் தனது தந்தையின் உயிரைக் காப்பாற்ற தான் கல்லீரல் தானம் செய்ததாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஆதின் ஒல்லூர்.

அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, இதை அறிவிக்க இதுதான் சரியான நேரம் என்று நினைக்கிறேன். எனது தந்தைக்கு கல்லீரல் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. கடந்த மே 18-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. இப்போது இருவரும் நலமாக உள்ளோம். நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறேன். எனது தந்தையும் சீக்கிரமே வீடு திரும்புவார். நண்பர்களுடைய பிரார்த்தனைகளுக்கு நன்றி. எனது தந்தைக்கு கல்லிரல் தானம் கொடுத்ததை நான் பெருமையாக கருதவில்லை, இது எனது கடமை, அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன். இந்த ஆபரேஷனை செய்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்” என்று கூறியுள்ளார்.
25 வயதுடைய இளம் இயக்குநர் ஒருவர் தந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலை தானம் செய்திருப்பது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

மேலும் படிக்க: 12 முறை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் யோகிபாபு?
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading