மருத்துவரை மணமுடித்தார் இயக்குநர் விஜய்!

இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம்
- News18
- Last Updated: July 11, 2019, 7:03 PM IST
இயக்குநர் ஏ.எல்.விஜய், மருத்துவர் ஐஸ்வர்யா திருமணம் இன்று நடைபெற்றது.
‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். தொடர்ந்து மதராசபட்டிணம், தலைவா உள்ளிட்ட படங்களை இயக்கிய இவர் 2014-ம் ஆண்டு நடிகை அமலாபாலை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு அளித்தனர். இதையடுத்து இவர்களுக்கு 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவாகரத்து வழங்கியது குடும்ப நல நீதிமன்றம்.இதையடுத்து சமீபத்தில் தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ஏ.எல்.விஜய், ஐஸ்வர்யா என்ற பொதுநல மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.

அதன்படி சென்னை மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த ராஜன் பாபு - அனிதா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா - இயக்குநர் ஏ.எல்.விஜய் திருமணம் இன்று நடைபெற்றது. இந்த திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கு திரைத்துறையினர் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வீடியோ பார்க்க: 2019-ல் எதிர்பார்க்கப்படும் படங்கள் - ஒரு பார்வை

Happy married life dear @DirectorALVijay brother 😊 pic.twitter.com/YqqdvRbGYF
— RK SURESH (@studio9_suresh) July 11, 2019