முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / பீஸ்ட், வாரிசு படங்களுக்கு கிடைத்த விமர்சனத்தால் மாறிய நபர்!? - 'தளபதி 67' அப்டேட்டில் அதிரடி மாற்றம்!

பீஸ்ட், வாரிசு படங்களுக்கு கிடைத்த விமர்சனத்தால் மாறிய நபர்!? - 'தளபதி 67' அப்டேட்டில் அதிரடி மாற்றம்!

தளபதி 67

தளபதி 67

விஜய்யின் நடனத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைவரும் எதிர்பார்த்த தளபதி 67 அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதில் அனிருத் - இசை, மனோஜ் பரமஹம்சா - ஒளிப்பதிவு என அப்டேட்டில் இருந்த தகவல்கள் ஏற்கனவே ரசிகர்களுக்கு தெரிந்ததுதான். நண்பன், பீஸ்ட் படங்களுக்கு பிறகு 3வது முறையாக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர் வடிவமைக்கவுள்ளார். படத்தொகுப்பாளராக பிலோமின் ராஜும், கலை இயக்குநராக சதிஷ் குமாரும் பணியாற்றவுள்ளனர். அதே போல லோகேஷ் கனகராஜுடன் ரத்ன குமார் மற்றும் தீரஜ் வைத்தி இணைந்து இந்தப் படத்துக்கு வசனம் எழுதுகின்றனர்.

இந்த நிலையில் இந்தப் படத்துக்கு நடன இயக்குநராக தினேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தினேஷ் தான் நடனம் அமைத்திருந்தார். அந்தப் பாடலில் ஒரு ஷோல்டரை தூக்கி ஆடும் ஸ்டைல் நடனம் இந்திய அளவில் பிரபலமானது. இந்திய பிரபலங்கள் பலரும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோ பகிர்ந்திருந்தனர்.

அதற்கடுத்து விஜய் நடித்த பீஸ்ட், வாரிசு பாடல்களுக்கு ஜானி நடனம் அமைத்தார். அந்தப் படங்களின் பாடல்களான அரபிக் குத்து, ரஞ்சிதமே நடனம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம் என்பது பலரும் கருத்தாக இருந்துவருகிறது. குறிப்பாக ரஞ்சிதமே பாடல் வெளியானபோது அந்தப் பாடலின் இறுதியில் நீண்ட டிரம்ஸ் பீட் ஒன்றுவரும். அதற்கு விஜய்யின் நடனத்தைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருந்தார்கள். ஆனால் படம் பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனையடுத்து நடிகர் விஜய்க்கு ஜானி செட் ஆகவில்லை என்ற விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் தளபதி 67 படத்தின் அப்டேட் வெளியான நிலையில் அதில் நடனம் தினேஷ் மாஸ்டர் என குறிப்பிடப்பட்டிருந்தது. விமர்சனங்களைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எது எப்படியோ ரசிகர்களுக்கு வாத்தி கம்மிங் போல ஒரு பாடல் தளபதி 67 படத்திலிருந்து ரசிகர்களுக்கு கிடைக்கும்.


First published:

Tags: Actor Thalapathy Vijay