Dimple Hayathi: விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹையாதி! யார் இவர்?

டிம்பிள் ஹையாதி

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது.

  • Share this:
    விஷால் தனது 31-வது படத்தை நேற்று பூஜையுடன் ஆரம்பித்தார். து.பா.சரவணன் என்ற அறியமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

    விஷாலின் ’சக்ரா’ படம் இந்த வருடம் வெளியானது. முந்தைய ஆக்‌ஷன், அயோக்யா படங்களைப் போல சக்ராவும் பாக்ஸ் ஆபிஸில் நொண்டியடித்தது. தற்போது எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் விஷாலுடன் ஆர்யாவும் நடித்துள்ளார். இந்நிலையில், நேற்று புதிய படத்தை தொடங்கினார். இது அவரது 31-வது படம்.

    இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிக்கிறது. து.பா.சரவணன் என்பவர் இயக்குகிறார். எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கியவர் இவர். யுவன் ஷங்கர் ராஜா இசை. படத்தின் சிறப்பம்சம், நாயகி டிம்பிள் ஹயாதி. இதுவரை கேள்விப்பட்டிராத பெயர்.

    டிம்பிள் ஹயாதி 2017-ல் வெளியான கல்ப் தெலுங்குப் படத்தில் நடித்திருந்தார். அது தான் முதல்படம். அதன் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த தேவி 2 படத்தில் சின்ன வேடம். அதன் பிறகு தெலுங்கு படமொன்றில் ஒரேயொரு பாடலுக்கு நடனமாடினார். உதிரி வேடங்களில் நடித்து வந்த டிம்பிள் ஹயாதி எப்படி விஷாலின் ஜோடியானார்...?

    அதற்கு காரணம் ரவி தேஜாவின் கிலாடி திரைப்படம். இந்த மாத இறுதியில் வெளியாவதாக இருந்த கிலாடியை தள்ளி வைத்துள்ளனர். இதில் ரவி தேஜாவுக்கு இரண்டு வேடங்கள், இரண்டு நாயகிகள். அதில் ஒருவர் டிம்பிள் ஹயாதி. தவிர ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் நடித்து வருகிறார். இந்தியில் கார்த்திக் ஆரியனுடனும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

    ஆரம்பம் உதிரி கதாபாத்திரங்களாக இருந்தாலும், ஹயாதியின் கரியர் பலமாக டேன் ஆஃப் ஆகியிருக்கிறது. அதன் வெளிப்பாடே விஷால் படத்தில் நாயகியானது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: