• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Dilip Kumar: இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி 'திலீப் குமார்’!

Dilip Kumar: இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி 'திலீப் குமார்’!

திலீப் குமார்

திலீப் குமார்

திரைப்படங்களை தேர்வு செய்வதில் மிக நேர்த்தியுடன் செயல்பட்டதன் காரணமாக வெறும் 65 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

  • Share this:
    இந்திய திரையுலகின் நடிப்பு சக்கரவர்த்தி என புகழப்பட்ட திலீப்குமார் தனது 98-வது வயதில் இன்று உயிரிழந்தார். அவர் குறித்த ஒரு சுவாரசியமான செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

    நாடக மேடையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக பரிமாண வளர்ச்சி கண்ட இந்திய திரையுலகில் 1940-களில் நடிகர்கள் சத்தம்போட்டு வீராவேசமாக நடித்து வந்த நிலையில், இரண்டு பக்க வசனத்தில் சொல்ல முடியாத உணர்ச்சிகளை கூட மௌனத்தால் முகபாவங்களில் சொல்லி திரை உலகில் புதிய சகாப்தம் எழுதினார் திலீப் குமார்.

    யூசுப்கான் ஆக பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் நகரில் பிறந்த இவர், தனது திரை பெயராக திலீப் குமார் என்ற பெயருடன் ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்கு மேல் இந்திய திரை உலகை ஆட்சி செய்தார்.

    மும்பை டாக்கீஸ் நிறுவனத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்கச் சென்ற யூசுப் கானுக்கு நடிக்கும் வாய்ப்பு எதார்த்தமாக கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட திலீப் குமார் இந்திய திரை உலகின் தவிர்க்க முடியாத பெயராக மாறினார்.

    1944ஆம் ஆண்டு தொடங்கி 1998 ஆம் ஆண்டு வரை நடித்த திலீப் குமார் தான் நடிக்கும் திரைப்படங்களை தேர்வு செய்வதில் மிக நேர்த்தியுடன் செயல்பட்டதன் காரணமாக வெறும் 65 திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். எனினும் ஒவ்வொரு திரைப்படத்தின் மூலமும் இந்திய திரை உலகில் மெதட் ஆக்‌டிங் எனப்படும் வித்தியாசமான நடிப்பு மூலம் முத்திரை பதித்துள்ளார் திலீப் குமார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Jwar Bhata திரைப்படத்தின் மூலம் அறிமுகமான திலீப்குமார் அடுத்தடுத்து நடித்த Devdas, Mughal-e-Azam உள்ளிட்ட இந்திய திரை உலகின் முக்கிய திரைப்படங்களான மாறின.

    பத்மபூஷன் பத்மவிபூஷன் ஆகிய இந்தியாவின் மிக உயரிய விருதுகளை வென்றுள்ள திலீப் குமார் பாகிஸ்தானில் வழங்கப்படும் நிசான் இ இம்தியாஸ் என்ற பாகிஸ்தானின் மிக உயரிய விருதையும் வென்றுள்ளார்.

    கார்கில் போர் நடைபெற்ற போது அது குறித்து அன்றைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன் பேசிய இந்திய பிரதமர் வாஜ்பாய், உடன் திலீப்குமாரையும் நவாஸ் ஷரிப் இடம் பேசச் செய்தார். இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலமும் பொழுதெல்லாம் இந்திய முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியில் வர அச்சப்படுகிறார்கள் என நவாக்ஷரி படம் உடனடியாக நிலைமையை சீர் செய்ய கோரிக்கை விடுத்தார் திலீப் குமார். அந்த அளவிற்கு இரு நாடுகளுக்கு இடையே செல்வாக்குப் பெற்று விளங்கியவராக திகழ்ந்த திலீப் குமாரின் மறைவு இந்தியா கடந்து பாகிஸ்தானிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: