• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • அண்ணாத்த படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி...?

அண்ணாத்த படத்தின் உரிமையை வாங்கிய உதயநிதி...?

அண்ணாத்த

அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் அண்ணாத்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயண்ட் வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. இதன் திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. 

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் அவர் நடித்தப் படங்களுடன் நீர்ப்பறவை போன்ற அவர் நடிக்காத சில படங்களையும் தயாரித்துள்ளது. ரஜினியின் பேட்ட உள்பட பல படங்களின் விநியோக உரிமையையும் வாங்கியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேரடி அரசியலில் இறங்கி எம்எல்ஏ ஆன பிறகு புதிய படங்கள் எதிலும் உதயநிதி கமிட் ஆகவில்லை. அதேநேரம் திரைப்பட வர்த்தகத்தில் தீவிரமாக இறங்கியுள்ளார்

சுந்தர் சி. இயக்கியிருக்கும் அரண்மனை 3 படத்தின் அனைத்து உரிமைகளையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

Also read... கைவிடப்பட்ட ரகுல் ப்ரீத் சிங்கின் காண்டம் பரிசோதனையாளர் படம்!

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் அண்ணாத்த படத்தின் திரையரங்கு விநியோக உரிமையையும் ரெட் ஜெயண்ட் வாங்கியிருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் உலவுகின்றன. உதயநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அண்ணாத்த போஸ்டரை பகிர்ந்திருப்பது, இந்த வதந்திக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: