• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனுஷுக்கு பதில் சிவகார்த்திகேயன் - ராட்சசன் இயக்குனர் திடீர் முடிவு?

தனுஷுக்கு பதில் சிவகார்த்திகேயன் - ராட்சசன் இயக்குனர் திடீர் முடிவு?

தனுஷ், சிவகார்த்திகேயன்

தனுஷ், சிவகார்த்திகேயன்

ராட்சசன் வெளிவந்த போதே, ராம் குமார் தனுஷை இயக்குவதாக முடிவானது. ஆனால், இன்றைய தேதிவரை தனுஷ் ராம் குமாருக்கு கால்ஷீட் தரவில்லை.

  • News18
  • Last Updated :
  • Share this:
முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம் குமார் தனுஷுக்குப் பதில் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கப் போவதாக இரு தினங்களாக செய்திகள் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.

2018 இல் வெளியான ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தமிழில் ராட்சசன் போல் சீட்நுனில் உட்கார வைத்த த்ரில்லர் படங்கள் மிகக்குறைவு. இல்லை என்றே சொல்லலாம். படத்தின் இந்தி டப்பிங்கை யூடியூபில் பல கோடி பேர் பார்த்துள்ளனர். தவிர, இந்தியில் இந்தப் படத்தை ரீமேக்கும் செய்கின்றனர்.

ராட்சசன் வெளிவந்த போதே, ராம் குமார் தனுஷை இயக்குவதாக முடிவானது. ஆனால், இன்றைய தேதிவரை தனுஷ் ராம் குமாருக்கு கால்ஷீட் தரவில்லை. கர்ணன், தி க்ரே மேன், மாறன், திருச்சிறம்பலம், நானே வருவேன் என்று தனுஷின் பாதை வேறு திசையில் நீண்டு செல்கிறது.

இதன் காரணமாக தனுஷுக்குப் பதில் சிவகார்த்திகேயனை வைத்து ராம் குமார் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பதாகவும் கூறப்பட்டது.

Also read... கேரள திரையரங்குகளை காப்பாற்றும் ஆங்கில, தமிழ்ப் படங்கள்!

நாம் விசாரித்தவரையில் ராம் குமார் தனுஷ் படத்தை இயக்குவதில் உறுதியாகவே உள்ளார். அடுத்த வருட கோடையில் படம் தொடங்கப்படலாம். அதற்கு முன் ஒருவேளை சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை எடுக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், தனுஷை வைத்து அவர் படம் இயக்குவது உறுதி, அதில் மாற்றமில்லை என்கிறார்கள்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்வரை எதையும் உறுதிபட கூறமுடியாது என்பதே சினிமா உலகின் முதல் விதியே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: