கணவரை பிரிந்தாரா ப்ரியாமணி?

பிரியாமணி

பிரியாமணி

வெப் தொடர், சினிமா என பிஸியாக நடித்து வருகிறார் பிரியாமணி. அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கிறார்.

 • Share this:
  நடிகை ப்ரியாமணியும், அவரது கணவர் முஸ்தபா ராஜுவும் பிரிந்துவிட்டதாகவும், இருவரும் தனித்தனியே வசிப்பதாகவும் வெளியான வதந்தியை தீபாவளி பொய்யாக்கியிருக்கிறது.

  நடிகை ப்ரியாமணி 2017-ல் முஸ்தபா ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அதிகம் சினிமாவில் நடிக்காமல் இருந்தவர், தி பேமிலி மேன் வெப் தொடருக்குப் பின் மீண்டும் பிஸியானார்.

  வெப் தொடர், சினிமா என பிஸியாக நடித்து வருகிறார். அவ்வப்போது தனது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கிறார்.

  இந்நிலையில், முஸ்தபா ராஜுவின் முதல் மனைவி, தன்னை விவாகரத்து செய்யாமல், ப்ரியாமணியை திருமணம் செய்து கொண்டதாகவும், அதனால் முஸ்தபா - ப்ரியாமணி திருமணம் செல்லாது எனவும் கூறினார்.

  இதற்கு முஸ்தபா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தனக்கு ப்ரியாமணியுடன் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் கடந்த பிறகு வேண்டுமென்றே பொய்க்குற்றச்சாட்டு சொல்கிறார் என முதல் மனைவியை கடிந்திருந்தார்.   
  View this post on Instagram

   

  A post shared by Priya Mani Raj (@pillumani)


  இந்த சர்ச்சையை தொடர்ந்து முஸ்தபா, ப்ரியாமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் வதந்தி கிளம்பியது. தீபாவளியை கணவர் முஸ்தபாவுடன் கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ப்ரியாமணி.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Shalini C
  First published: