Home /News /entertainment /

Fact Check: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.50 கோடி நன்கொடை அளித்தாரா கேஜிஎப் புகழ் யாஷ்?

Fact Check: அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.50 கோடி நன்கொடை அளித்தாரா கேஜிஎப் புகழ் யாஷ்?

நடிகர் யாஷ்

நடிகர் யாஷ்

Actor Yash: நடிகர் யாஷ் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று தரிசனம் செய்ததாகவும் கோவிலின் கட்டுமான பணிகளுக்காக ரூ.50 கோடி நன்கொடை வழங்குவதாக கூறியதாகவும் தகவல் பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu | Karnataka
    அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கேஜிஎப் படத்தில் நடித்த நடிகர் யாஷ் ரூ.50 கோடி நன்கொடை வழங்கியதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. இது குறித்த உண்மை நிலை என்ன?

    உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு 5ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதை தொடர்ந்து கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    இதுவரை 40 சதவீத கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் முழு கட்டுமானப் பணிகளும் நிறைவு பெறும் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 5000 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கேஜிஎஃப் திரைப்படத்தில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்ற கன்னட நடிகர் யாஷ், அப்படத்தின் மூலம் பான் இந்தியா ஸ்டாராகவும்  உயர்ந்தார். இந்நிலையில், நடிகர் யாஷ் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு நேரில் சென்று தரிசனம் செய்ததாகவும் கோவிலின் கட்டுமான பணிகளுக்காக ரூ.50 கோடி நன்கொடை வழங்குவதாக தெரிவித்ததாகவும் ஒருசில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களிலும் பலரும் இது தொடர்பாக பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த செய்தியின் உண்மை தன்மையை ஃபிரீ பிரஸ் ஜெர்னல் ஊடகம்  சோதித்து பார்த்ததில், யாஷ் அயோத்தி சென்றதாக கூறி பரப்பப்படும் புகைப்படம் கடந்த ஆண்டு அவர் திருப்பதி சென்றிருந்தபோது எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.  மேலும், நடிகர் யாஷ் அயோத்தி கோவில் கட்டுமான பணிகளுக்கு நன்கொடை வழங்குவது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என ஃபிரீ பிரஸ் ஜெர்னல் ஊடகம் கூறியுள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Ayodhya Ram Temple, KGF 2

    அடுத்த செய்தி