ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பொன்னியின் செல்வன் டயலாக்! அதே ஸ்டைல், அதே குரலில் அப்பா விக்ரம் மாதிரியே பேசிய துருவ் விக்ரம்!

பொன்னியின் செல்வன் டயலாக்! அதே ஸ்டைல், அதே குரலில் அப்பா விக்ரம் மாதிரியே பேசிய துருவ் விக்ரம்!

விக்ரம் - துருவ் விக்ரம்

விக்ரம் - துருவ் விக்ரம்

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை குவித்துள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    அப்பா விக்ரமின் ‘பொன்னியின் செல்வன்’ டயலாக்கை அவரது மகன் துருவ் ரீ-கிரியேட் செய்து பாராட்டை பெற்றார். இதுதொடர்பான வீடியோ ஒன்று விக்ரம் மற்றும் துருவ் ரசிகர்களால் அதிகம் பகிரப்படுகிறது.

    நடிகர் விக்ரம் சினிமாவிற்கு வந்து 32 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. தற்போது அவரது மகன் துருவ் விக்ரம் சினிமாவுக்குள் என்ட்ரி ஆகியுள்ளார். 2019-இல் வெளிவந்த ‘ஆதித்யா வர்மா’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் துருவ்.

    தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டியின் ரீமேக் தான் இந்த ஆதித்யா வர்மா. இதன் பின்னர் அப்பாவுடன் இணைந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் மகான் என்ற படத்தில் துருவ் விக்ரம் நடித்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தியேட்டர்களில் வெளியாக வேண்டிய இந்த படம், கொரோனா பாதிப்பால் துரதிருஷ்டவசமாக ஓ.டி.டி. தளத்தில் வெளியாகியது.

    ' isDesktop="true" id="821002" youtubeid="KsH2LA8pCjo" category="cinema">

    தற்போது துருவ் விக்ரம் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாகக நடித்திருக்கும் விக்ரம் பேசக்கூடிய டயலாக்கை துருவ் விக்ரம் ரீ கிரியேட் செய்துள்ளார்.

    இந்த டயலாக்கை நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேச நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை விக்ரம் மற்றும் துருவ் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் பகிர்ந்துள்ளனர்.

    அமேசான் ப்ரைமில் சூப்பர் ஹிட் மலையாளப் படங்கள்! இதோ உங்களுக்கான டாப் 10 லிஸ்ட்!

    விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வசூலை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Published by:Musthak
    First published:

    Tags: Actor dhruv