Home /News /entertainment /

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் துருவ் விக்ரம்?

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

Vignesh Shivam ,Dhruv Vikram : துருவ் விக்ரமை வைத்து அடுத்த படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன் ?

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமின் சினிமா அறிமுகம் பாலா மூலமாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று கருதி, அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வைத்தார். பாலா தனது ஸ்டைலில் படத்தை எடுக்க, அது அர்ஜுன் ரெட்டி கதையே அல்ல என்று தயாரிப்பாளர்கள் படத்தை முற்றாக நிராகரித்து வேறொரு இயக்குனரை வைத்து மொத்த படத்தையும் திரும்ப எடுத்தனர். இப்படியொரு சிக்கலான ஓபனிங் எந்த ஸ்டார் நடிகரின் வாரிசுக்கும் அமைந்ததில்லை.

துருவ் விக்ரமின் இரண்டாவது படமாக மகான் தயாராகியிருக்கிறது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இயக்கம். அவரது முந்தைய படமான ஜகமே தந்திரம் தந்த அனுபவத்தில் மகான் படத்தை அச்சத்துடனே பார்க்கிறது திரையுலகம்.

also read : தேவதை வம்சம் நீயோ.. அதிதி சங்கரின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..

படம் திரையரங்கில் வெளியாகுமா இல்லை ஓடிடியா என்பதை உறுதியாக சொல்ல முடியாத நிலையில் தயாரிப்பாளர் இருக்கிறார்.இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவிருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.

அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பார் எனவும் தகவல்கள் கூறுகின்றன. விக்னேஷ் சிவன் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை எடுத்து வருகிறார். படம் டிசம்பர் 24 வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து துருவ் விக்ரமை வைத்து அவர் புதுப்படத்தை தொடங்க வாய்ப்புள்ளது. -
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Dhruv Vikram, Vignesh Shivan

அடுத்த செய்தி