புதிய தளத்தில் அடியெடுத்து வைத்த துருவ் விக்ரம்!

news18
Updated: May 25, 2019, 1:02 PM IST
புதிய தளத்தில் அடியெடுத்து வைத்த துருவ் விக்ரம்!
விக்ரம் - துருவ்
news18
Updated: May 25, 2019, 1:02 PM IST
விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் ட்விட்டர் தளத்தில் இணைந்துள்ளார்.

திரைத்துறையில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். இவர் அர்ஜூன் ரெட்டி தமிழ் ரீமேக்கின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக உள்ளார்.

முதலில் வர்மா என்ற டைட்டிலில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் நடித்தார் துருவ். ஆனால் சில காரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


தற்போது அதேபடம் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை அர்ஜூன்ரெட்டி பட இயக்குநர் சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கிரி சய்யா இயக்குகிறார். ஜூலையில் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இருந்த துருவ் விக்ரம் தற்போது ட்விட்டர் தளத்திலும் இணைந்துள்ளார். முன்னதாக அவரது பெயரில் பல போலியான ட்விட்டர் கணக்குகள் இயங்கி வந்த நிலையில் அதனைக் களையும் பொருட்டு தற்போது ட்விட்டர் பக்கத்தில் இணைந்துள்ளார் துருவ் விக்ரம்.

தன்னிகரில்லா ‘தல’ அஜித் அறிமுகப்படுத்திய முன்னணி இயக்குநர்கள்!

Loading...

First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...