Home /News /entertainment /

இயக்குநராக மாறிய துருவ் விக்ரம் - வெளியானது மனசே இசை வீடியோ!

இயக்குநராக மாறிய துருவ் விக்ரம் - வெளியானது மனசே இசை வீடியோ!

மனசே

மனசே

துருவ் விக்ரம் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த நிலையில், தற்போது இயக்கத்திலும் கவனம் செலுத்துகிறார் என கூறப்படுகிறது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
துருவ் விக்ரம் இயக்கி நடித்துள்ள மனசே என்ற இசை வீடியோ வெளியாகி உள்ளது. 

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பாலா இயக்கிய வர்மா திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகவில்லை.  அதே திரைப்படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுத்து வெளியிட்டனர்.

அதைத்தொடர்ந்து தன்னுடைய தந்தையுடன் சேர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மகான் படத்தில் நடித்தார். அந்தப் படம் நேரடியாக ஓ.டி.டியில் வெளியானது. அதற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது.

இதனால்  துருவ் விக்ரம் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக பயிற்சியும் எடுத்துவந்தார். ஆனால் மாரி செல்வராஜ்,  உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கச் சென்றார்.

Also read... குரு பாக்யராஜின் திரைக்கதையால் சிஷ்யன் பாண்டியராஜனுக்கு கிடைத்த வெற்றி

இந்த நிலையில் துருவ் விக்ரம் ஒரு மியூசிக் வீடியோவை உருவாக்கியுள்ளார். மனசே என்று தொடங்கும் அந்த பாடலை அவரே எழுதி பாடியுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவரே இயக்கியும் இருக்கிறார்.

துருவ் விக்ரம் நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்த நிலையில், தற்போது இயக்கத்திலும் கவனம் செலுத்துகிறார் என கூறப்படுகிறது. அதில் முன்னோட்டமாகவே தற்போது மனசே என்ற மியூசிக் வீடியோவை அவரை எழுதி பாடி இயக்கியுள்ளார் என கூறுகின்றனர். எனவே அவர் வருங்காலத்தில் திரைப்படத்தை இயக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Dhruv Vikram

அடுத்த செய்தி