Home /News /entertainment /

நடிகையுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்... காதலில் துருவ் விக்ரம்?

நடிகையுடன் துபாயில் புத்தாண்டு கொண்டாட்டம்... காதலில் துருவ் விக்ரம்?

துருவ் விக்ரம்

துருவ் விக்ரம்

இந்த புத்தாண்டை இவர்கள் மட்டுமில்லை, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் துபாயில்தான் கொண்டாடியது.

நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் பேசப்படுகிற மாதிரி இன்னும் ஒரு படம் நடிக்கவில்லை. அதற்குள் காதலுக்காக அவர் பெயர் மீடியாக்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.

அர்ஜுன் ரெட்டி தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மாவில் நடிகராக துருவ் விக்ரம் அறிமுகமானார். படம் சரியாகப் போகவில்லை. அடுத்து தந்தை விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் இந்தப் படம் முடிந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் வாங்கியுள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது. இந்தப் படம் வந்தால்தான் துருவ் விக்ரமின் முகம் தமிழ் ரசிகர்களை சென்றடையும்.

இந்நிலையில் இந்த புத்தாண்டை அவர் துபாயில் நடிகை பனிட்டா சந்துவுடன் கொண்டாடியிருக்கிறார். இவர் ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமின் ஜோடியாக நடித்தவர். துபாயில் புத்தாண்டு கொண்டாடிய வீடியோவை இந்த ஜோடி பகிர்ந்துள்ளது. துபாயின் பிரபலமான புர்ஜ் காலிஃபாவை பனிட்டா சந்து ரசிக்கும் புகைப்படம் ஒன்றையும் துருவ் விக்ரம் பகிர்ந்துள்ளார். இதன் காரணமாக இந்த இளம் ஜோடி காதலிப்பதாக இணையத்தில் கிசுகிசு எழுந்துள்ளது.

Dhruv Vikram celebrates New Year in Dubai with actress Banita Sandhu, Dhruv Vikram, Dhruv Vikram, Dhruv Vikram selfie, Dhruv Vikram movies, துருவ் விக்ரம், dhruv vikram wiki, dhruv vikram movies, dhruv vikram age, dhruv vikram height, dhruv vikram wife, dhruv vikram next movie, dhruv vikram twitter, dhruv vikram father, துருவ் விக்ரம் காதல், துருவ் விக்ரம் படங்கள், துருவ் விக்ரம் செல்ஃபி, banita sandhu height, banita sandhu instagram, banita sandhu age, banita sandhu net worth, banita sandhu family, banita sandhu and dhruv vikram, banita sandhu parents, பனிடா சந்து, நடிகை பனிடா சந்து

இந்த புத்தாண்டை இவர்கள் மட்டுமில்லை, நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியும் துபாயில்தான் கொண்டாடியது. புத்தாண்டு பிறந்த கணத்தில் புர்ஜ் காலிஃபாவின் முன் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கட்டி அணைத்துக் கொள்ளும் வீடியோவை அந்த ஜோடி வெளியிட்டிருந்தது. இப்போது துருவ் விக்ரம் - பனிட்டா சந்து ஜோடியும் வீடியோ வெளியிட்டுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published:

Tags: Dhruv Vikram, Tamil Cinema

அடுத்த செய்தி